அவனி டெலி மீடியா சார்பில் நடிகை குஷ்பு சுந்தர் தயாரிக்க, சுந்தர்.சி கதாநாயகனாகவும், ஜெய் வில்லனாகவும் நடித்திருக்கும் படம் ‘பட்டாம்பூச்சி’. இதில் ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
1982 களில் நடக்கும் சைக்கோ த்ரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை பத்ரி எழுதி இயக்கியிருக்கிறார். கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவு செய்ய, நவநீத் சுந்தர் இசையமைத்திருக்கிறார். பென்னி ஆலிவர் படத்தொகுப்பு செய்ய ராஜசேகர் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். நரு.நாராயணன், மகா கீர்த்தி ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளனர்.
கொடூரமான சைக்கோ கொலைகாரன் கதாபாத்திரத்தில் ஜெய்யும் அவரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்க துடிக்கும் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் சுந்தர் சி யும் நடித்துள்ளனர்.
இப்படத்திரைப்படத்தின் டிரைலர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், இப்படம் வரும் ஜூன் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...