வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து நடித்து வரும் அசோக் செல்வன் அறிமுக இயக்குநர் சந்தீப் ஷியாம் இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘வேழம்’. கே4 கிரியேஷன்ஸ் சார்பில் கேசவன் தயாரித்துள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா மேனன், ஜனனி ஐயர் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.
டி.இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சென்னையில் உள்ள ரேடியோ எப்.எம் நிறுவனத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. மேலும், இசையமைப்பாளர் டி.இமான் தனது சமூக வலைதள பக்கத்தில் “மாறும் உறவே...” என்ற வீடியோ பாடலை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற நிலையில், படத்தின் பாடல்களும் ஹிட்டகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், அசோக் செல்வன் முதல் முறையாக அதிரடி ஆக்ஷன் காட்சிகளிலில் நடித்திருப்பதாலும் இப்படம் கோலிவுட்டின் கவனத்தை ஈர்த்துள்ள ‘வேழம்’ வரும் ஜூன் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...