Latest News :

’விக்ரம்’ பட நடிகைக்கு கொடைக்கானல் படப்பிடிப்பில் பாராட்டு விழா!
Friday June-17 2022

இளையராஜா இசையமைக்கும் 1417வது படமாக ஆதிராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நினைவெல்லாம் நீயடா’ படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து வருகிறது. 

 

இசைஞானி இளையராஜா எழுதி யுவன் சங்கர் ராஜா பாடிய "இதயமே இதயமே... உன்னைத் தேடித் தேடி..." என்ற பாடலுக்கு கதாநாயகன் பிரஜன் கதாநாயகி சினாமிகா பங்குபெற்ற நடனக் காட்சிகளை நடன இயக்குநர் தினேஷ் படமாக்கி வருகிறார்.

 

சமீபத்தில் திரைக்கு வந்து மாபெரும்  வெற்றி பெற்று வசூலைக் குவித்துக் கொண்டிருக்கும் கமலஹாசனின் விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனா என்ற கேரக்டரில் நடித்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்த வசந்தி பிரபல டான்ஸ் மாஸ்டர் தினேஷிடம் உதவி நடன இயக்குநராக பணியாற்றுபவர். 

 

கொடைக்கானலில் நடந்துவரும் படப்பிடிப்பில் பணியாற்ற வந்த நடிகை வசந்திக்கு ‘நினைவெல்லாம் நீயடா’ படக்குழு சார்பில் கதாநாயகி சினாமிகா ரோஜா மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இயக்குநர் ஆதிராஜன் மலர் கொத்து வழங்கி வாழ்த்தினார். 

 

படத்தின் தயாரிப்பாளர் ராயல் பாபு, நடிகர் பிரஜன், ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாசார்ஜி,  ஆர்ட் டைரக்டர் முனிகிருஷ்ணா, மாஸ்டர் தினேஷ், மேனேஜர் இளங்கோ ஆகியோரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். படக்குழுவினர் அனைவரும் கைதட்டி வசந்திக்கு வாழ்த்து கூறினர்.

Related News

8318

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery