Latest News :

காதலிக்கும் இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் ஏக் லவ் யா
Friday June-17 2022

1000 கோடி வசூல் செய்யும் பான் இந்தியா ஆக்ஷன் படங்கள் வெளியாவது அதிகரித்தாலும், இந்திய அளவில் சினிமா ரசிகர்களிடம் காதல் கதைகளுக்கு என்றுமே தனி மரியாதை உண்டு.

 

எனவே, எந்த காலகட்டமாக இருந்தாலும் நல்ல காதல் படங்களை கொண்டாடுவதில் ரசிகர்கள் தவறியதில்லை. அதிலும் காதலோடு தற்போதைய டிரெண்டுக்கு ஏற்ப திரில்லரோடு வெளியான காதல் படங்களுக்கு வெற்றி உறுதி.

 

அப்படி ஒரு படம் தான் ஏக் லவ் யா. ரக்ஷிதா பிலிம் பேக்டரி சார்பில் ரக் ஷிதா பிரேம் தயாரித்துள்ள இப்படத்தை பிரேம்.எஸ் இயக்கியுள்ளார்.

 

இதில் ஹீரோவாக புதுமுக நடிகர் ராணா நடித்துள்ளார். ஹீரோயினாக ரச்சிதா ராம் நடித்துள்ளார். இவர்களுடன் சரன்ராஜ் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ரேஷ்மா நானய்யா, சசிகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

கதைப்படி, ஹீரோவின் முன்னாள் காதலி சில மர்ம நபர்களால் கற்பழிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்று விடுகிறார். இதற்கிடையே இந்த கற்பழிப்புக்கு ஹீரோ தான் காரணம் என்று கூறி அவர் மீது பழி போடுகிறார்கள். நிரபராதியன ஹீரோ தன் மீது விழுந்த பழியை துடைப்பததோடு, உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித்தர மிகப்பெரிய வக்கீலை எதிர்த்து போராடுகிறார். இத்தகைய போராட்டத்தில் ஹீரோ எப்படி வெற்றி பெறுகிறார் என்பதை ஆக்ஷன் திரில்லர் ஜானரில் சொல்வத்தொடு, இளைஞர்கள் காதலில் எப்படி நேர்மையாக இருக்கா வேண்டும் என்பதையும், உண்மையான காதல் பற்றியும் அழுத்தமாக சொல்லி காதலர்கள் மற்றும் இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது.

 

Ek Love Ya

 

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் உருவாகியுள்ளது இப்படத்தின் கன்னட பதிப்பு ஏற்கனவே வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

 

இந்த நிலையில், ஏக் லவ் யா தமிழ் மற்றும் மலையாள பதிப்பு வரும் ஜூலை 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

 

ஏக் லவ் யா படத்தின் தமிழ் மற்றும் மலையாள பதிப்பை இவானியா புரொடக்ஷன்ஸ் மற்றும் பிலிக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் அபிலாஷ் நந்தகுமார் மற்றும் பிரசாத் கிருஷ்ணா தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வெளியிடுகிறார்கள்.

 

அர்ஜுன் ஜனயா இசையமைத்துள்ள இப்படத்திற்கு மகேன் சிம்ஹா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஶ்ரீநிவாஸ் பி.பாபு படத்தொகுப்பு செய்துள்ளார்.

Related News

8321

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery