தமிழ் திரையுலகில் பெரும் வெற்றியை குவித்த, அனைவராலும் கொண்டாடப்பட்ட, காமெடி படங்களான ’ஏ1’, ’பாரீஸ் ஜெயராஜ்’ படங்களை இயக்கிய இயக்குநர் ஜான்சன்.கே, தனது அடுத்த படத்தை துவங்கியுள்ளார். இந்த புதிய திரைப்படத்திற்கு ‘மெடிக்கல் மிராக்கல்’ என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.
முழுக்க முழுக்க காமெடி ஜானரில், அனைவரும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தை எழுதி இயக்குவதோடு, ஏ1 புரோடக்சன்ஸ் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார் இயக்குநர் ஜான்சன்.கே.
இப்படத்தில் நாயகனாக தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கிறார். இப்படத்தில் அவர் ஓலா டிரைவர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். தர்ஷா குப்தா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் மன்சூர் அலிகான், சேசு, கல்கி, மதுரை முத்து, டி.எஸ்.ஆர், நாஞ்சில் சம்பத், KPY வினோத், KPY பாலா, டைகர் தங்கதுரை, சித்தார்த் விபின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
சித்தார்த் விபின் இசையமைக்க, எஸ்.மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்கிரார். தமிழ்குமரன் படத்தொகுப்பு செய்ய, ராஜா.ஏ கலையை நிர்மாணிக்கிறார். ரோகேஷ் பாடல்கள் எழுதுகிறார்.
முழுக்க முழுக்க அரசியல் காமெடியாக உருவாகவுள்ள ’மெடிக்கல் மிராக்கல்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...