Latest News :

அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த ‘வீட்ல விசேஷம்’!
Sunday June-19 2022

ஆக்‌ஷன் மற்றும் ஹாரர் படங்களின் வருகை அதிகரித்ததால் மக்கள் குடும்பமாக தியேட்டருக்கு வரும் சூழல் சமீபத்தில் இல்லாமல் இருந்த நிலையில், அந்த சூழ்நிலையை மீண்டும் உருவாக்கியுள்ளது ‘வீட்ல விசேஷம்’ திரைப்படம்.

 

ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை என்.ஜே.சரவணனனுடன் இணைந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை தயாரித்து வரும் ஜீ ஸ்டுடியோஸ், பேவீவ் புரொஜக்ட்ஸ் சார்பில் போனி கபூர் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் ஆகியோர் தயாரித்துள்ள இப்படம் கடந்த 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 

பெரியவர்கள், சிரியவர்கள் என அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ள இப்படத்தை ஊடகங்கள் பாராட்டியது ஒரு பக்கம் இருந்தாலும், படம் பார்த்த பொதுமக்கள் அனைவரும், படம் நல்லா காமெடியாக இருப்பதோடு, குடும்பமாக பார்க்க கூடிய பொழுதுபோக்கு படமாகவும் இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள்.

 

ஆர்ஜே பாலாஜி கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு தனது வழக்கமான காமெடி காட்சிகள் மற்றும் சமூக பொறுப்புடனும் படத்தில் பல வசனங்களை பேசியிருப்பது, சத்யராஜ் மற்றும் ஊர்வசி ஆகியோரது கெமிஸ்ட்ரி மற்றும் நடிப்பு என படத்தில் இடம்பெற்றுள்ள  ஏராளமான விஷயங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதோடு, கதைக்களம் வித்தியாசமான முறையில் இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

 

இதன் மூலம் ‘வீட்ல விசேஷம்’ ஓடும் தியேட்டர்களில் குடும்பமாக ரசிகர்கள் வருவது அதிகரித்திருப்பதோடு, சிரிப்பு சத்தத்தால் தியேட்டரும் அதிர்கிறது.

Related News

8324

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery