லட்சுமி , பானுமதி, ரேவதி, சுகாஷினி, லட்சுமி ராமகிருஷ்னா ஆகிய பெண் இயக்குநர்கள் வரிசையில் நடன இயக்குநர் சுவர்ணாவும் இணைகிறார். 300 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியிருக்கும் சுவர்ணா, ‘நாதிரு தின்னா’ படத்தின் மூலம் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகிறார்.
பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணத்திலும் , காதலித்து இணையும் திருமணத்திலும் நடைபெறும் குடும்ப சிக்கல்களை வைத்து இளமை ததும்ப நகைச்சுவையுடன் கூடிய ஒரு வித்தியாசமான படமாக உருவாகியுள்ள இப்படத்திற்காக நான்கு மாநிலங்களில் நட்சத்திர தேர்வு நடத்தினார். இதில் தமிழகம், ஆந்திரா, ஒடிசா, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்களை தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளார்.
சபயாச்சி மிஸ்ரா, ஷ்யாம், மகி, ராகுல் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் ராதிகா ப்ரீத்தி, விஜயலட்சுமி, ஹரிகா, ரக்ஷா, அப்பாஜி, தருண் மாஸ்டர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஸ்ரீதர் நர்லா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு முரளீதர் ராகி சையமைக்க, வின்செண்ட் ஜெயராஜ், விஜயகுமார் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடனம் அமைத்து இயக்கியிருக்கும் சுவர்ணா எஸ்.எஸ் ட்ரீம் கலர்ஸ் நிறுவனம் சார்பில் படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார்.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...