தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படத்திற்கு ‘வாரிசு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கதை,திரைக்கதையை வம்சி பைடிப்பள்ளி, ஹரி, அஹிஷோர் சாலமன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவை கவனிக்க, படத்தொகுப்பை தேசிய விருதுபெற்ற படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் மேற்கொள்ள இருக்கிறார்.

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...