’வீட்ல விசேஷம்’ திரைப்படத்தின் வெற்றியால் உற்சாகமடைந்திருக்கும் ஆர்ஜே பாலாஜி, தனது ரசிகர்கள் உற்சாகமடையும் ஒரு தகவலை நேற்று வெளியிட்டுள்ளார். அதாவது நடிகர் விஜய்க்கு ஆர்ஜே பாலாஜி ஒரு கதை சொல்லியிருக்கிறாராம். அந்த கதை விஜய்க்கும் பிடித்துவிட்டதால் விரைவில் விஜய் பட இயக்குநராக அவர் உருவெடுக்க இருக்கிறார்.
‘எல்.கே.ஜி’, ‘மூக்குத்தி அம்மன்’ மற்றும் ‘வீட்ல விசேஷம்’ என்று தொடர்ந்து மூன்று வெற்றி படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் ஆர்ஜே பாலாஜி, அப்படங்களில் இயக்குநராகவும் கதையாசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் ஆர்ஜே பாலாஜி நடிகர் விஜய்க்கு ஒரு கதை சொன்னாராம். ஆர்ஜே பாலாஜியிடம் இருந்து மூக்குத்தி அம்மன் போன்ற ஒரு குடும்ப காமெடி கதையை எதிர்ப்பார்த்த விஜய், பாலாஜியின் கதையை கேட்டு வியந்து விட்டாராம். காரணம், ‘ஆர்.ஆர்.ஆர்’ மற்றும் ‘கே.ஜி.எப்’ போன்ற ஒரு மிகப்பெரிய ஃபான் இந்தியா படத்திற்கான கதையை பாலாஜி சொன்னாராம்.
அத்துடன், ‘கே.ஜி.எப்’ மற்றும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படங்கள் வெளியாவதற்கு முன்பாகவே அப்படி ஒரு கதையை பாலாஜி சொல்லியதால் அசந்து போன விஜய், அந்த கதையை முழுமையாக தயார் செய்யுமாறு பாலாஜியிடம் தெரிவித்துளாராம்.
அந்த கதையை முழுமையாக தயார் செய்ய சுமார் ஒரு வருடம் ஆகும் என்று விஜயிடம் ஆர்ஜே பாலாஜி சொல்ல, நீங்க எவ்வளவு காலம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள், எப்போது வேண்டுமானாலும் என்னை சந்தித்து கதை சொல்லுங்கள், என்று விஜய் கூறியிருக்கிறாராம்.
ஆக, விரைவில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் விஜய் நடிக்கப் போவது உறுதியாகிவிட்டது.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் - தன்னுடைய எதிர்கால திட்டங்கள் குறித்தும், தற்போது பணியாற்றி வரும் பணிகள் குறித்தும், தன் மீது சமூக வலைதளங்கள் மூலமாக முன்வைக்கப்பட்ட எதிர்மறை விமர்சனங்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையிலும் சென்னையில் பத்திரிக்கையாளர் - ஊடகவியலாளர்களை சந்தித்தார்...
சங்கமித்ரன் புரொடக்ஷன்ஸ் மற்றும் அம்மன் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் சார்பில், என்...
பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகாஷ் அமையா ஜெயின் தயாரிப்பில் ஜெயராம்,விஜய் சேதுபதி, நகுல், ஆத்மிகா, ரித்திகா சென் நடிப்பில் சனில் இயக்கியுள்ள திரைப்படம் காதல் கதை சொல்லவா...