சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன், கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாயோன்’. டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரித்திருக்கும் அருண்மொழி மாணிக்கும், இப்படத்தின் கதை திரைக்கதையையும் எழுதியுள்ளார். அறிமுக இயக்குநர் என்.கிஷோர் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு மக்களின் வரவேற்பும், ஊடகங்களின் பாராட்டும் கிடைத்து வருகிறது. தமிழகத்தின் பழங்காலத்து கோவில்கள் மற்றும் அதில் புதைந்திருக்கும் மர்மங்களை பற்றியும், ஆன்மீகம் மற்றும் அறிவியலுக்கு இடையே உள்ள தொடர்பையும் அட்வெஞ்சர் பாணியில் சொல்லப்பட்டிருக்கும் இப்படம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்திருக்கிறது.
இந்த நிலையில், இப்படத்திற்கு தமிழகத்தில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தெலுங்கிலும் இப்படத்தை மிக பிரம்மாண்டமான முறையில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. படத்தை பார்த்த தெலுங்கு சினிமா விநியோகஸ்தர்கள் இப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று கூறியதோடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சுமார் 350-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். அதன்படி ‘மாயோன்’ தெலுங்கு பதிப்பு வரும் ஜூலை 7 ஆம் தேதி வெளியாக உள்ளது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...