இசையமைப்பாளர்கள் நடிகர் மற்றும் இயக்குநர் ஆவதும், இயக்குநர்கள் இசையமைப்பாளர்கள் ஆவதும் தமிழ் சினிமாவில் அவ்வபோது நடக்கும் சம்பவங்கள் தான். அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வரும் மிஷ்கின், தற்போது இசையமைப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.
இயக்குநர் மிஷ்கினி தம்பியும், ‘சவரக்கத்தி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவருமான ஆதித்யா இயக்கும் படம் ‘டெவில்’. மாருதி பிலிம்ஸ் சார்பில் ஆர்.ராதாகிருஷ்ணன் தயாரிக்கும் இந்த படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் சுபஸ்ரீ ராயகுரு அறிமுகமாகிறார்.
இப்படத்தில் மிக முக்கியமான திருப்புமுனை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இயக்குநர் மிஷ்கின், இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார். பல படங்களில் பாடல்கள் எழுதுவதோடு பாடவும் செய்திருக்கும் மிஷ்கின், தனது படங்களின் பின்னணி இசையில் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில், தற்போது திரைப்படத்திற்கு இசையமைக்கவும் தொடங்கியிருக்கிறார்.
’டெவில்’ படத்திற்காக மிஷ்கின் நான்கு பாடங்களை கொடுத்திருக்கிறாராம். நான்கு பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகும் அளவுக்கு சிறப்பாக வந்திருப்பதாக கூறும் படக்குழு விரைவில் பாடல்களை வெளியிட முடிவு செய்துள்ளது.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...