கதையின் நாயகனான காமெடி நடிகர்கள் பட்டியலில் புதிதாக இணைந்திருக்கிறார் முனீஷ்காந்த். ‘முண்டாசுப்பட்டி’ படம் மூலம் காமெடி நடிகராக பிரபலமான முனீஷ்காந்த், தொடர்ந்து பல படங்களில் காமெடி நடிகராக மட்டும் இன்றி குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கும் ‘மிடில் கிளாஸ்’ படம் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார் முனீஷ்காந்த். இதில் அவருக்கு ஜோடியாக விஜயலட்சுமி நடிக்கிறார். இவர்களுடன் ராதாரவி, மாளவிகா அவினாஷ், வேல ராமமூர்த்தி, வடிவேல் முருகன், குரைஷி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
‘மரகத நாணயம்’, ‘ராட்சசன்’, ‘ஓ மை கடவுளே’, ‘பேச்சிலர்’ என தொடர்ந்து வித்தியாசமான வெற்றி படங்களை தயாரித்து வரும் அக்சஸ் பிலிம் பேக்டர் ஜி.டில்லி பாபு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று காலை தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்ட ’பேச்சிலர்’ பட இயக்குநர் சதீஷ் கிளாப் போர்டு அடிக்க, ‘ராட்சசன்’ இயக்குநர் ராம்குமார் ஆக்ஷன் சொல்லி முதல் ஷாட்டை தொடங்கி வைத்தார்கள்.

நடுத்தர குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி பொழுதுபோக்கு குடும்ப டிராமா திரைப்படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...