தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த மீனா, அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்ற கம்ப்யூட்டர் இன்ஜினியரை திருமணம் செய்துக்கொண்ட மீனா, சிறிது காலம் நடிக்காமல் இருந்தார். அவருக்க் ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை வளர்ந்ததும் மீண்டும் நடிக்க தொடங்கிய மீனா மலையாளத் திரைப்படங்களில் மீண்டும் கதையின் நாயகியாகவும் நடித்து வருகிறார்.
இதற்கிடையே நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர், சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தார்.
அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி...
ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர்...
கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில், அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் ’அதர்ஸ்’...