ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘யானை’ படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வரும் ஜூலை 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
அதிரடி ஆக்ஷன் மற்றும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களை இயக்கி வந்த இயக்குநர் ஹரி, அதே பாணியில் அதே சமயம், தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு வித்தியாசமான சில முயற்சிகளை கையாண்டு ‘யானை’ படத்தை இயக்கியுள்ளார்.
அருண் விஜய் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். இவர்களுடன் சமுத்திரக்கனி, கே.ஜி.எப் வில்லன் ராஜேந்திரன் ராஜு, யோகி பாபு, ராதிகா சரத்குமார், போஸ் வெங்கட் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
அருண் விஜயும், இயக்குநர் ஹரி முதல் முறையாக இணைந்துள்ள இப்படத்தை டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிக்க , இணை தயாரிப்பை சந்தியா கிஷோர்குமார் கவனித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் பாடல்கள், டிரைலர் என அனைத்தும் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ‘யானை’ படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...