வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வரும் அருள்நிதி நடிக்கும் படங்களுக்கு ரசிகர்களிடம் தனி வரவேற்பு உண்டு. அவர் நடித்து வரும் படங்கள் ஊடகங்களின் பாராட்டை தொடர்ந்து பெற்று வருகிறது. அந்த வகையில் அறிமுக இயக்குநர் எருமசானி புகழ் விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் அருள்நிதி நடித்திருக்கும் படம் ‘டி பிளாக்’. சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் திரைப்படமான இப்படம் வரும் ஜூலை 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
பொறியியல் கல்லூரி ஒன்றில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் திரைப்படமாக இருந்தாலும், படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என்பது சமீபத்தில் வெளியான படத்தின் ஸ்னீக்பீக்கில் தெரிந்தது.
அருள்நிதி, அவந்திகா மிஸ்ரா, கரு பழனியப்பன், சரண் தீப், தலைவாசல் விஜய், ரமேஷ் கண்ணா, உமா ரியாஸ் கான், எரும சானி விஜய், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்தை எம்.என்.எம் பிலிம்ஸ் சார்பில் அரவிந்த் சிங் தயாரித்திருப்பதோடு இப்படத்திற்கு ஒளிப்பதிவும் செய்திருக்கிறார்.
தொடர்ந்து புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து வரும் அருள்நிதி, தற்போது பல படங்களில் பல வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் நிலையில், ‘டி பிளாக்’ படத்தில் கல்லூரி மாணவர் வேடத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை குறைத்து நடித்துள்ளார்.
அருள்நிதி நடித்த அனைத்து படங்களும் தரமான படங்களாக இருந்தது போல் இப்படமும் இருக்கும் என்பதாலும், பல தரமான படங்களை விநியோகம் செய்து வரும் சக்தி பிலிம் பேக்டரியின் பி.சக்திவேலன் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுவதாலும் இப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கன்னட சினிமாவின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பிரியங்கா மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு பிரமாண்ட படைப்பில் இணைந்துள்ளார்...
சிந்தியா ப்ரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில், சிந்தியா லூர்டே நடிக்க, அறிமுக இயக்குநர் தினேஷ் தீனா கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘அனலி’...
இந்திய இசையை உலக அரங்கில் நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்காற்றிய ஆஸ்கர் மற்றும் கிராமி விருது வென்ற இசைப்புயல் ஏ...