கிரினேடிவ் குழுமத்தை சேர்ந்த கிரினேடிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.மோகன் ராகேஷ் பாபு தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் நாயகனாக விதார்த் நடிக்கிறார். சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் மணிமாறன் நடராஜன் இயக்குகிறார்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் ஸ்ரீனிவாசன் சுந்தர் எழுதுகிறார். எஸ்.ஆர்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார். மோகன் கலை இயக்கத்தை கவனிக்க, நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பு செய்கிறார். தினேஷ் சுப்பராயண் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்க, தேசிய விருது பெற்ற மூத்த கலைஞர் பட்டணம் ரஷீத், சிறப்பு ஒப்பனைக்காக பிரத்யேகமாக பணியாற்றுகிறார்.
இப்படத்திற்கான நாயகி மற்றும் வில்லன் கதாப்பாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் சென்னையில் பூஜையுடன் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக பட குழுவினருடன் நந்தகுமார் ஐ ஏ எஸ், இயக்குநர்கள் கார்த்திக் சுந்தர், சற்குணம், ராம்நாத் பழனிக்குமார் ‘டோரா’ தாஸ் ராமசாமி, ‘நெருப்பு டா’ அசோக்குமார், ‘மஞ்சப்பை’ என். ராகவன் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் வருகை தந்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இவ்விழாவில் www.greenativefilms.com என்ற இந்த குழுமத்தின் திரைப்படப்பிரிவிற்கென பிரத்யேக இணையத்தள சேவையும் தொடங்கப்பட்டது.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை முதல் படமாக தயாரிக்கும் கிரினேடிவ் பிலிம்ஸ், இப்படத்தை தொடர்ந்து அகில இந்திய அளவிலான ஃபான் இந்தியா திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...