’ராக்கி’, சாணிக்காயிதம்’ ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி மக்களிடம் அமோக வரவேற்பு பெற்றுள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் வழங்கும், இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக மக்களின் பேசு பொருளாக ஆன நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கான வீடியோ இந்தியாவில் மட்டும் இன்றி சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் பெரும் ஆச்சர்யம் என்னவென்றால் வெறும் 24 மணி நேரத்தில் 5.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்ற, கோலிவுட்டின் முதல் அறிவிப்பு வீடியோவாக ‘கேப்டன் மில்லர்’ புதிய சாதனையைப் படைத்துள்ளது என்பது மிகவும் சுவாரஸ்யமான விஷயம். ‘கேப்டன் மில்லர்’ படம் மொழி எல்லைகளை கடந்து, அனைத்து திரை ரசிகர்களிடமும் ஒரு அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கரண் ஜோஹர், தனது டிவிட்டர் பக்கத்தில் ”இப்படம் காவியமாக இருக்கப்போகிறது” என அறிப்பு வீடியோவினை பாராட்டி பதிவிட்டுள்ளார். தவிர, நாடு முழுவதும் உள்ள பல முன்னணி திரைப்பட இயக்குநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் நடிகர்கள் இந்த அறிவிப்பு வீடியோவினை பகிர்ந்து பாராட்டி வருகின்றனர். நாடு முழுதும் இந்த வீடியோ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் தனுஷ் ட்வீட் செய்த அறிவிப்பு வீடியோ ட்விட்டரில் 2 மில்லியன் பார்வைகளையும், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற பிரமாண்டமான வரவேற்பும், எல்லா இடங்களிலிருந்தும் மனதைத் தொடும் பாராட்டுக்களும், 'கேப்டன் மில்லர்' படத்தினை இப்போதே அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியத் திரைப்படமாக மாற்றியுள்ளது.
சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ’கேப்டன் மில்லர்’ படத்தை தயாரிக்கின்றனர். ஜி.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார்.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...