ஹரி இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் கடந்த ஜூலை 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான ‘யானை’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கடந்த மாதம் வெளியான ‘விக்ரம்’ படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அப்படத்திற்குப் பிறகு வெளியான எந்த ஒரு படமும் பெரிய அளவில் வசூலிக்காத நிலையில், அருண் விஜயின் ‘யானை’ படம் அந்த குறையை போக்கி வசூலில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது.
மாஸ் கமர்ஷியல் படங்களை அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் கொடுக்க கூடிய இயக்குநரி ஹரி இயக்கத்தில் முதல் முறையாக அருண் விஜய், நடித்திருந்தாலும் படத்தில் மிகப்பெரிய அளவில் ஸ்கோர் செய்திருக்கிறார். குடும்பத்தின் நலனுக்காக போராடும் வாலிபராகவும், பெண்களை மதிக்கும் மனிதராகவும் அதே சமயம் எதிரிகளை அடித்து துவம்சம் செய்வதில் மதம் பிடித்த யானையாக மிரட்டியிருக்கும் அருண் விஜயின் நடிப்பை ஊடகங்கள் வெகுவாக பாராட்டியுள்ளது.
அதேபோல், பாடல்கள், யோகி பாபுவின் காமெடி, சண்டைக்காட்சிகளை வித்தியாசமான முறையில் படமாக்கிய விதம், நாகரீகமான காதல், குடும்ப உறவு செண்டிமெண்ட் என முழு திரைப்படமாக அனைத்து தரப்பினரையும் கவரந்திருக்கும் படம் வெளியான நாள் முதல் ஹவுஸ்புல் காட்சிகளோடு ஓடிக்கொண்டிருக்கிறது.
உலகம் முழுவதும் 1500 திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் ‘யானை’ வெளியான 4 நாட்களில் ரூ.12 கோடி வசூலித்திருப்பது. ‘விக்ரம்’ படத்திற்குப் பிறகு தமிழ்ப் படம் ஒன்று மிகப்பெரிய வசூலை ஈட்டியிருக்கிறது என்றால் அது ‘யானை’ திரைப்படம் மட்டுமே என்பதால், படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.
மேலும், ‘யானை’ படத்தின் மூலம் வசூல் ஹீரோவாக உருவெடுத்துள்ள அருண் விஜயின் மார்க்கெட் உயர்ந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...