கடந்த மூன்று மாதங்களாக தமிழக மக்களின் எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துக்கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தாலும், அந்நிகழ்ச்சி குறித்த சர்ச்சை மட்டும் இன்னும் முடிவாகவில்லை. தினமும் அந்நிகழ்ச்சி குறித்தும், அதில் பங்கேற்றவர்கள் குறித்தும் எதாவது பரபரபரப்பான தகவல் வெளியாகிக் கொண்டு தான் இருக்கிறது.
அந்த வகையில் தற்போது சினேகன் தான் உண்மையான வெற்றியாளர் என்றும், அதற்காக ஆதாரமும் இருக்கிறது, என்றும் ரசிகர்கள் ஒருவர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். சமூக வலைதலங்களில் வைரலாக பரவி வரும் அந்த வீடியோ பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, விஜய் டிவி-யில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 100 வது நாள் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே நேரத்தில் ரசிகர் ஒருவர், தனது பேஸ் புக் பக்கத்தில், பிக் பாஸ் வெற்றியாளர் யார்? என்ற தலைப்பில் வாக்கு பதிவு ஒன்றை நடத்தியுள்ளார். இதில், ஹரிஷ், சினேகன், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் ஆரவ் என நான்கு பேரது பெயரையும் பதிவிட்டுட்டுள்ளார். அதிகமான ரசிகர்கள் சினேகனுக்கு தான் வாக்கு செலுத்தியுள்ளனர். இதனால், சினேகன் தான் பிக் பாஸில் வெற்றி பெறுவார், என்று அனைத்து ரசிகர்களும் எதிர்ப்பார்த்துள்ளனர்.
இந்த நிலையில், விஜய் டிவி ஆரவை வெற்றியாளராக அறிவித்ததும், சினேகனுக்கு வாக்களித்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியதோடு, எப்படி சினேகன் தோற்றார்? என்று லைவாக வாக்கு பதிவு நடத்தியவரிடம் பலர் கேட்டு நச்சரிக்க தொடங்கியுள்ளார்கள். இதையடுத்து சினேகன் பெற்ற வாக்குகளையும், அவர் தோற்றது சதி என்ற ரீதியிலும் தான் பேசிய வீடியோவையும் இணைத்து அந்த நபர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ் போட்டியின் உண்மையான வெற்றியாளர் சினேகன் தான், என்பதை நிரூபிக்கும் ஆதாரமாக உள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறதாம்.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...