Latest News :

1970-களில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகும் ‘மூத்தகுடி’
Thursday July-07 2022

ராசு மதுரவனின் ‘முத்துக்கு முத்தாக’, ‘கோரிப்பாளையம்’, ‘சாவி’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த பிரகாஷ் சந்திராவும், இயக்குநரும் நடிகருமான தருண் கோபியும் இணைந்து நடிக்கும் படத்திற்கு ‘மூத்தகுடி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

‘சாவி’ படத்தை தயாரித்த தி ஸ்பார்க்லேண்ட் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக உருவாகும் ‘மூத்தகுடி’ படம் 1970-களில் கோவில்பட்டி அருகே நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகிறது. 

 

‘டெல்டா’, ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரவி பார்கவன் இயக்கும் இப்படத்தில் பிரகாஷ் சந்திரா மற்றும் தருண் கோபி ஹீரோக்களாக நடிக்க, ஹீரோயினாக அன்விஷா அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், ராஜ்கபூர், சிங்கம் புலி, யார் கண்ணன், சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடிக்க, பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா இப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார்.

 

Moothakudi

 

19870-களில் நடந்த உண்மை சம்பவம் கதைக்களம் என்பதால், கோவில்பட்டி, சாத்தூர், சங்கரன்கோவில், எட்டயபுரம், கயத்தாறு, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் 1970 மற்றும் 1980-களில் உள்ளது போன்றஇடங்களை தேர்வு செய்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள்.

 

ஹீரோவாக நடிப்பதுடன் தி ஸ்பார்க்லேண்ட் நிறுவனம் மூலம் பிரகாஷ் சந்திரா இப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார். ரவிசாமி ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் முருகானந்தம் இசையமைக்கிறார். சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்ய, கதை மற்றும் வசனத்தை எம்.சரக்குட்டி எழுதுகிறார். பாடல்களை நந்தலாலா எழுதுகிறார். சரவெடி சரவணன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.

Related News

8361

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery