Latest News :

தமிழகர்களின் ஏக்கத்தை போக்கிய லைகா சுபாஷ்கரன்! - வைரலாகும் ’பொன்னியின் செல்வன்’ டீசர்
Sunday July-10 2022

’பாகுபலி’ வெற்றிக்குப் பிறகு இப்படி ஒரு படம் தமிழ் மொழியில் வெளியாகாதா? என்று ஏங்கிக்கொண்டிருந்த தமிழ் ரசிக்ரகளின் ஏக்கத்தை போக்கும் விதத்தில், ‘பொன்னியின் செல்வன்’ படத்தை மிக பிரம்மாண்டமான திரைப்படமாக லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார்.

 

எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பலர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக எடுக்க முயற்சித்து அதில் தோல்வியடைந்த நிலையில், இயக்குநர் மணிரத்னம் அந்த முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், அவர் இதை வெற்றிகரமாக செய்வாரா? என்ற கேள்வி பலரிடம் ஏற்பட்ட நிலையில், மற்றவர்களால் செய்ய முடியாததை செய்து முடிக்கும் மற்றும் இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் அவருடன் கைகோர்த்தவுடன் நிச்சயம் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் திரைப்படமாக உருவாகும் என்ற நம்பிக்கை பிறந்தது.

 

அதன்படி, பல சிக்கள்கள் வந்தாலும் அனைத்தையும் எதிர்த்து நின்று வெற்றிகரமாக ‘பொன்னியின் செல்வன்’ படத்தை சுபாஷ்கரன் தயாரித்து முடித்திருக்கிறார். மணிரத்னத்தின் இயக்கத்தில் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருப்பதோடு, படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை பல மடங்கு அதிகரித்திருக்கிறது.

 

 

தமிழர்களின் பெருமையை உலகிற்கு சொல்லும் மேலும் ஒரு ஆதாரமாகவும், சோழ மன்னர்களின் ஆட்சி மற்றும் தமிழகத்தை தாண்டிய அவர்களின் வெற்றியை உலகிற்கு சொல்லும் ஒரு திரைப்படமாக உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இந்திய சினிமாவை தாண்டி உலக சினிமாவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் என்று டீசரை பார்த்த ரசிகர்களும், பல பிரபலங்களுக்கும் பேசி வருகிறார்கள்.

Related News

8365

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery