Latest News :

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொண்ணு’! - ஜூலை 15 ஆம் தேதி வெளியாகிறது
Monday July-11 2022

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லட்கி’ (Ladki) திரைப்படம் தமிழில் ‘பொண்ணு’ என்ற தலைப்பில் வெளியாகிறது. ஆர்ட்சீ மீடியா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இண்டோ சைனீஸ் கோ புரொடக்‌ஷன்ஸ்  (ARTSEE MEDIA PRODUCTION & INDO / CHINESE CO PRODUCTION ) நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ளது.

 

நாயகியை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸ் வீராங்கனை பூஜா பலேகர் முதன்மை பாத்திரத்தில், சண்டை காட்சிகளில் அசத்தியுள்ளார். வரும் ஜூலை 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

 

நிகழ்ச்சியில் ராம் கோபால் வர்மா பேசுகையில், “இந்தப்படம் எனக்கு மிகவும் சவாலான மனதிற்கு பிடித்த படம். கல்லூரி நாட்களில் இருந்தே புரூஸ்லி என் இதயத்திற்கு நெருக்கமானவராக இருந்துள்ளார். அவர் படங்களை நான் தொடர்ந்து பார்த்து வந்திருக்கிறேன். அவரின் படங்கள் போல் இந்தியாவில் மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்கள் வந்ததில்லை. நான் இயக்குநராக வந்த பிறகு மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்கள் எடுக்கலாம் என நினைத்தேன். ஆனால் அது தள்ளிப்போனது. இறுதியாக இந்தப்படம் எடுக்க நினைத்த போது புரூஸ்லீயின் உருவம் என் மனதில் வந்து போனது. அவர் மிக ஒல்லியான உருவம் கொண்டவர் ஆனால் திரையில் அவர் தரும் மேஜிக் அற்புதமானது. அதே நேரம் ஒரு பெண்ணை வைத்து எடுத்தால் என்ன என எனக்கு தோன்றியது. பலரை தேடி கடைசியாக பூஜா பலேகர் குறித்து கேள்விபட்டு சந்தித்தேன். அவரின் திறமைகள் பார்த்து வியந்தேன். அவரின் வீடியோவை மார்ஷியல் ஆர்ட்ஸ் பிறப்பிடமான சைனாவின் ஒரு கம்பெனியிடம் காட்டினேன். அவர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். பிறகு இந்தப்படத்தை அவர்களுடன் இணைந்து தயாரித்தேன். கோவிட் காரணங்களால் இந்தப்படம் தாமதமாகிவிட்டது. அனைத்து மொழிகளிலும் இந்தப்படத்தை ஒரே நேரத்தில் அனைத்து மொழியிலும் வெளியிட வேண்டும் என திட்டமிட்டோம். ஹைதராபாத்தில் புரூஸ் லியின் எண்டர் தி டிராகன் திரைப்படம் பார்க்க என்னிடம் பணம் இல்லை ஆனால் இப்போது என்னுடைய மார்ஷியல் ஆர்ட்ஸ் படம் அதே தியேட்டரில் வெளியாகவுள்ளது மகிழ்ச்சி. இது என கனவு இப்போது நனவாகியிருப்பது சந்தோஷம்.” என்றார்.

 

நடிகை பூஜா பலேகர் பேசுகையில், “நான் இந்த படத்திற்காக இங்கு வந்ததில் சந்தோசமடைகிறேன். போன முறை நான் சென்னை வந்த போது தற்காப்பு கலை வீரராக வந்தேன். இன்று நடிகையாக இங்கு வந்துள்ளேன். ராம் கோபால் வர்மா சார் உடைய படத்தில் நான் நடித்தது, எனக்கு கனவு போல் உள்ளது. நான் ராம் கோபால் வர்மா சாரின் ரசிகை. இன்று அவரது இயக்கத்தில் ஒரு தற்காப்பு கலை படத்தில் நடிப்பதில் பெருமை அடைகிறேன். இந்த படம் சீனாவில் 40,000 திரைகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக நான் அழைக்கப்பட்ட போது, எனது சண்டை முறைகள் அவருக்கு பிடித்திருந்தது. பின்னர் சில பயிற்சிகளை செய்தேன். அதன் பிறகு படபிடிப்பு துவங்கியது. எனக்கு நடிப்பில் முன் அனுபவம் எதுவும் இல்லை. இயக்குனர் ராம் கோபால் சர்மா சார் தான், எனக்கு எல்லா உணர்வுகளையும் வெளியே கொண்டு வர உதவினார். நான் புரூஸ்லி  உடைய ரசிகை, படத்திலும் அப்படியொரு கதாபத்திரத்தில் நடித்தது மகிழ்ச்சி. இந்த படம் கண்டிப்பாக உங்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும். தியேட்டரில் வந்து படம் பாருங்கள். ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

 

ரமேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பால் பிரவீன் குமார் இசையமைத்துள்ளார். கமல் படத்தொகுப்பு செய்ய, மதுகர் தேவார கலையை நிர்மாணித்துள்ளார். பூஜா மற்றும் ராம்கோபால் வர்மா சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.

 

வரும் ஜூலை 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘பொண்ணு’ திரைப்படத்தை குருபரன் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.

Related News

8369

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery