கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒடிடி-யில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ‘சேத்துமான்’ படத்தை இயக்கிய தமிழ் இயக்கும் புதிய படத்தை ‘உறியடி’ புகழ் இயக்குநரும் நடிகருமான விஜய் குமார் ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.
கிராமப்புற பின்னணியில் அரசியல், ஆக்ஷன், காதல் கலந்த முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக தொடர்ந்து 60 நாட்கள் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

விஜய் குமார் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். திலீபன், பாவல் நவகீதன், மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த வஸந்தா இசையமைக்கிறார். சி.எஸ்.பிரேம் குமார் படத்தொகுப்பு செய்ய, ஸ்டன்னர் சாம் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். ஏழுமலை கலை இயக்குநராக பணியாற்றுகிறார். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுதுகிறார்.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...