Latest News :

பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் பூஜையுடன் தொடங்கியது
Saturday July-16 2022

‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குநர் பா.இரஞ்சித், அடுத்ததாக விக்ரமை வைத்து படம் இயக்குகிறார். இப்படம் நடிகர் விக்ரமின் 61 வது திரைப்படமாக உருவாக உள்ளது. ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா, இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். இப்படத்தின் துவக்க விழா இன்று பூஜையுடன் சென்னையில் நடைபெற்றது.

 

‘கோப்ரா’ மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ என இரண்டு பிரம்மாண்ட திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கும் விக்ரம், தற்போது இயக்குநர் பா.இரஞ்சித்துடன் கைகோர்த்திருப்பதால் இப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 22 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு தற்காலிக தலைப்பாக ‘விக்ரம் 61’ என்று வைக்கப்பட்டுள்ளது.

 

இன்று சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் துவக்க விழாவில்  நடிகர்கள் சிவகுமார், ஆர்யா, தயாரிப்பாளர்கள் டி.சிவா, எஸ்.ஆர்.பிரபு, அபினேஷ் இளங்கோவன், சி.வி.குமார், இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

 

இப்படத்தின் கதை, திரைக்கதையை தமிழ் பிரபா எழுத, ஒளிப்பதிவை கிஷோர் குமார் கவனிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு செல்வா படத்தொகுப்பு செய்ய, கபிலன், அறிவு, உமாதேவி ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள். சண்டை காட்சிகளை அன்பறிவு அமைக்க, நடனங்களை சாண்டி மேற்கொள்கிறார். 

 

இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் படப்பிடிப்பு பற்றி விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.

Related News

8379

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery