Latest News :

’நதி’ ரசிகர்களுக்கு நிச்சயம் ஆச்சரியத்தை கொடுக்கும்! - கரு பழனியப்பன் பாராட்டு
Sunday July-17 2022

சாம் ஜோன்ஸ் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நதி’. வேல ராமமூர்த்தி, இயக்குநரும் நடிகருமான கரு பழனியப்பன், ஏ.வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் கே.தாமரைசெல்வன் இயக்கியிருக்கிறார்.

 

இப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் சாம் ஜோன்ஸ், தனது மாஸ் சினிமாஸ் சார்பில் தயாரித்தும் இருக்கிறார். காதலையும், நட்பையும் மையமாக கொண்டு சமூக அவலங்களை சாடும் ஒரு கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூலை 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துக்கொண்டு பத்திரிகையாளர்கள் முன்னிலையில் படத்தின் டிரைலரை வெளியிட்டனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய கரு பழனியப்பன், “படத்தின் கதையை பற்றி கூறும் போது, வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் தயங்கியபடி கூறினார். அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதில் தான் எனக்கு அதிக விருப்பம். வில்லனாக நடிக்கும் போது எப்படி வேண்டுமானாலும் பேச முடியும். நல்லவனாக நடிக்கும் போது அது முடியாது. அதனால் எனக்கு வில்லனாக நடிப்பது பிடிக்கும்.  இயக்குநர் குழப்பமே இல்லாமல், தெளிவாக படத்தை உருவாக்கி முடித்துள்ளார். சின்ன பட்ஜெட்டில் சிறந்த படைப்பை உருவாக்கியுள்ளார். இப்படத்தின் இண்டர்வல் நிச்சயமாக எல்லோரும் ஆச்சர்யப்படும் ஒன்றாக இருக்கும். ஒளிப்பதிவாளர் பிரபு அவர்களுடைய பணி படத்தின் கதையை விட்டு நகராமல் இருக்கும். இந்த படக்குழு இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்த படத்தை  உடனே உருவாக்க வேண்டும். ஆனந்தி படத்தில் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆனந்தி உடைய கதாபாத்திரம் இந்த படத்திற்கு பிறகு பெரிய அளவில் பேசப்படும். இந்த படம் கண்டிப்பாக கவனிக்கப்படும், படத்தில் உள்ள அனைவரும் பாராட்டப்படுவார்கள். அனைவருக்கும் நன்றி” என்றார்.

 

படத்தின் ஹீரோவும், தயாரிப்பாளருமான சாம் ஜோன்ஸ் பேசுகயில், “நான் அறிமுகமாகும் படம் ஆழமாக இருக்க வேண்டும் என நினைத்து கொண்டு இருந்தேன். இயக்குநர் எனக்கு இந்த கதை சொன்ன போது, அது எனக்கு மிகவும் பிடித்தது. ஒளிப்பதிவாளர் பிரபு சார்  இந்த படத்திற்கு முதுகெலும்பாக இருந்தார், அவர் இப்படத்தில் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். ஆனந்தி கதையை கேட்டவுடன் நடிக்க ஒத்துகொண்டார். கரு பழனியப்பன் சார் இந்த படத்திற்குள் வந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த படத்தின் கதைக்காக முழு ஒத்துழைப்பையும் கொடுத்துள்ளனர். படம் மிக நன்றாக வந்துள்ளது அனைவரும் உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.” என்றார்.

 

நடிகை ஆனந்தி பேசுகையில், “இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து மதுரையில் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதையை கேட்கும் போது, இந்த கதாபாத்திரத்தை நிச்சயம் செய்ய வேண்டும் என உறுதியாக இருந்தேன். சிறந்த கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறேன். இந்த படத்தில் பணிபுரிந்த அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றி” என்றார்.

 

நிகழ்ச்சியில் நடிகர் வடிவேல் முருகன் பேசுகையில், “இந்த படத்தின் மூலம் கரு பழனியப்பன் போன்ற ஒரு சகோதரர் எனக்கு கிடைத்துள்ளார். இயக்குநர் எந்தவித பதட்டமும் இல்லாமல், படத்தை எழுதி இயக்கியுள்ளார். இந்த படம் எனக்கு ஒரு முக்கியமான அனுபவமாக இருந்தது. படம் நன்றாக வந்துள்ளது. பார்த்துவிட்டு உங்கள் கருத்தை கூறுங்கள் நன்றி” என்றார்.

 

ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு பேசுகையில், “இந்த கதையை விட இயக்குநர் கதையை சொன்ன விதம், என்னை ஈர்க்கும் வகையில் இருந்தது. இந்த படத்தை தயாரிக்க முன்வந்த சாம் ஜோன்ஸ்க்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இருவரும் இணைந்து பொறுமையுடன் ஒரு சிறப்பான படத்தை உருவாக்கியுள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.

 

எடிட்டர் சுதர்ஷன் பேசுகையில், “இந்த படத்தை உருவாக்கும் போது ஒரு தெளிவு இயக்குநரிடம் இருந்தது. அவர் முழு அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைத்து  இந்த படத்தை உருவாக்கியுள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை தாருங்கள்” என்றார்.

 

இயக்குநர் தாமரை செல்வன் பேசுகையில், “இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. நடிகரும், தயாரிப்பாளருமான சாம் ஜோன்ஸும், நானும் இணைந்து சிறந்த படத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், பல கட்டங்களுக்கு பிறகு, இந்த திரைப்படத்தின் கதையை உருவாக்கினோம். படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நாங்கள் தேடிய பயணமே, ஒரு புது அனுபவமாக இருந்தது. படத்தின் கதாநாயகன் புதுமுகம் என்ற தயக்கம் எதுவும் இல்லாமல், ஆனந்தி இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். கரு பழனியப்பன் கதையை புரிந்து கொண்டு இந்த படத்திற்குள் வந்தார். படத்தில் பணிபுரிந்த அனைத்து நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் முழு பங்களிப்பை கொடுத்துள்ளனர். படம் சிறப்பாக வந்துள்ளது. படம் பார்த்துவிட்டு உங்களது கருத்தை கூறுங்கள். “ என்றார்.

 

இயக்குநர் ஏ.வெங்கடேஷ் பேசுகையில், “ஏபி இண்டர்நேஷ்னல் உடன் இந்த படத்தை இணைந்து தயாரிப்பாளர் வெளியிடுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கயல் ஆனந்தி திரையில் குடும்ப பாங்கான பாத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார். இயக்குநர் தாமரைசெல்வன் வேலை பார்க்கும் விதம் இயக்குநர் பாசில் உடைய பாணியில் இருக்கிறது. கோடங்கி இந்த படத்தில் முழுமையாக ஒரு நல்ல பாத்திரத்தில் வருகிறார், அவர் கதாபாத்திரம் அனைவரையும் ஈர்க்கும் படி இருக்கும். இப்படம் நிச்சயமாக வெற்றிப்படமாக அமையும்.” என்றார்.

Related News

8381

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery