Latest News :

சரக்கு இல்லாத இயக்குநர் லிங்குசாமியின் பொய் பிரச்சாரம்! - அதிர்ச்சியில் சூர்யா!
Sunday July-17 2022

‘ஆனந்தம்’ படத்தின் மூலம்  இயக்குநராக அறிமுகமான லிங்குசாமி, தற்போது ’ரன்’, ‘சண்டைக்கோழி’ என்று சில வெற்றிப் படங்களை கொடுத்தாலும், காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு திரைப்படங்களை கொடுக்காததால் தொடர் தோல்வியை தழுவினார். 

 

இதற்கிடையே நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கிய தெலுங்குப் படமான ‘தி வாரியர்’ திரைப்படமும் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த படத்தை தமிழிலும் வெளியிட்ட இயக்குநர் லிங்குசாமி இயக்குநராக படுதோல்வியை சந்தித்திருப்பதோடு, தயாரிப்பாளராகவும் இப்படத்தால் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளார்.

 

இந்த நிலையில், இயக்குநர் லிங்குசாமி தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜூனை வைத்து ஒரு படம் இயக்குவதாக பேட்டிகளில் கூறி வருவதோடு, தனது குடும்ப தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சூர்யா நடிக்க இருக்கும் ஒரு படத்தை இயக்க இருப்பதாக பேட்டிகளில் கூறி வருகிறாராம்.

 

தோல்விப் படம் கொடுத்த இயக்குநருக்கு இத்தனை பட வாய்ப்புகளா?! என்று அதிச்சியான கேள்வி நம் மனதில் எழ, இது பற்றி விசாரிக்கையில் அதைவிட மிகப்பெரிய அதிச்சியான தகவல் ஒன்று கிடைத்தது.

 

தோல்விப்படத்தை கொடுத்தாலும், தனக்கு இருக்கும் கடன் தொல்லையில் இருந்து தப்பிப்பதற்காக இயக்குநர் லிங்குசாமி, சூர்யா போன்ற பெரிய ஹீரோக்களை வைத்து தான் அடுத்த படம் இயக்க  இருப்பதாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறாராம்.

 

இந்த தகவல் அறிந்த சூர்யா தரப்பு அதிர்ச்சியடைந்ததோடு, நடிகர் சூர்யா திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திலோ அல்லது இயக்குநர் லிங்குசாமி இயக்கத்திலோ படம் எதுவும் பண்ணவில்லை, இது முழுக்க முழுக்க பொய்யான தகவல், என்று அறிவித்து வருகிறது.

 

ஆக, சரக்கு இல்லாத இயக்குநர் லிங்குசாமி, தப்பிப்பதற்காக பல பொய்யான தகவல்களை பேட்டிகளில் கூறி வருகிறார், என்பதை சூர்யா தரப்பு உறுதிப்படுத்தி அவரது பொய் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Related News

8383

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery