Latest News :

சிபிராஜின் நீண்ட நாள் ஆசையை பூர்த்தி செய்த ’வட்டம்’!
Monday July-18 2022

நயன்தாரா முதனை கதாப்பாத்திரத்தில் நடித்த ‘O2’ படத்தை தொடர்ந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக்கும் படம் ‘வட்டம்’. சிபிராஜ், அதுல்யா ரவி நடித்திருக்கும் இப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

 

திரில்லர் ஜானர் திரைப்படமான இதில், மனோ, ராமானுஜம், கௌதம் மற்றும் பாரு ஆகிய கதாப்பாத்திரங்கள் 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து சந்திக்கும் பிரச்சனைகளையும், பரபரப்பான சம்பவங்களையும் சீட் நுணியில் உட்கார பார்க்கும் விதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

 

இப்படம் குறித்து நடிகர் சிபிராஜ் கூறுகையில், “வட்டம் எனது கேரியரில் மிக முக்கியமான படம், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸுடன், இது எனது முதல் படம். சினிமா மீதான ஆர்வம் மற்றும் தனித்துவமான படைப்புகளை தேர்ந்தெடுத்து அதை சிறந்த தரத்தில் வழங்கும்  திரு.எஸ்.ஆர். பிரபு மற்றும் திரு எஸ்.ஆர். பிரகாஷ்  ஆகியோரின் ரசிகன் நான்.  வட்டம் படத்தை சூது கவ்வும் புகழ் திரு. ஸ்ரீனிவாஸ் கவிநயம் எழுதி, மதுபான கடை புகழ் திரு.கமலக்கண்ணன் இயக்கியிருப்பது, எனக்கு மிக மகிழ்ச்சியை தந்தது.  இந்த இரண்டு படங்களின் புத்துணர்ச்சியையும் நகைச்சுவையையும் ரசித்ததால் என்னை இந்த படைப்பு மேலும் உற்சாகப்படுத்தியது. எளிய இளைஞனாக நடிப்பதிலிருந்து மாறி,  சாதாரண மனிதனாக நடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசையை வட்டம் பூர்த்தி செய்துள்ளது. பெரிய லட்சியங்கள் ஏதுமில்லாமல் வாழக்கையை அதன் போக்கில் அந்த தருணத்தை அனுபவித்து வாழும் மனிதனாக நடித்துள்ளேன்,  நான் இப்படத்தில் கதாநாயகன் என்றாலும், மற்ற கதாபாத்திரங்களுக்கு, குறிப்பாக ஆண்ட்ரியா ஜெர்மியா மற்றும் அதுல்யா ரவி நடித்த கதாபாத்திரங்களுக்கும்  படத்தில் சம அளவில் முக்கியத்துவம் உள்ளது. இப்படம் உங்களுக்கு ஒரு புதுமையான அனுபவம் தரும்.” என்றார்.

 

இயக்குனர் கமலகண்ணன்  கூறுகையில், “நம் வாழ்க்கை சக்கரத்தில் நம்பிக்கை ஒளி  வந்து வந்து போகும். அதேபோல, நமது அன்றாட வாழ்க்கையும் அதே வழக்கமான முறையில்தான் இயங்குகிறது. நாம் ஒரே பாதையில் பயணிக்கிறோம், அதே நபர்களைச் சந்திக்கிறோம், ஒரே மாதிரி யோசிக்கிறோம். அதே பணிகளைச் செய்கிறோம், இதை மீண்டும் மீண்டும் நாள் முழுக்க செய்து கொண்டு இருக்கிறோம். இப்படி போய்கொண்டிருக்கும் வாழ்கையில் திடீரென ஏற்படும்,  ஒரு சிறிய மாற்றம் அந்த நாளை தலைகீழாக மாற்றிவிடும். நமது முழு பழக்கவழக்கங்களையும் கேள்விக்குள்ளாக்கும், மேலும் நம் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வைக்கும். நாம் மீண்டும் அந்த சக்கரத்தின் ஆரம்ப  புள்ளியை அடையும்போது, நம் பழக்கவழக்கங்கள் உட்பட, ஒரு பெரிய மாற்றத்தை அடைந்து இருப்பதை நாம் காணலாம். இது தான்  வட்டம் திரைப்படத்தின் மையக் கருவாக இருக்கும். ஒருவருக்கு ஒருவர் சம்பந்தம் இல்லாத பலர் மற்றவர்களுடைய வாழ்க்கையின் உள்ளே 24 நேரத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களும், அதனால் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களுக் தான் திரைக்கதை.” என்றார்.

 

’வட்டம்’ திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாக இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள படக்குழு விரைவில் வெளியீட்டு தேதியை அறிவிக்க உள்ளது.

Related News

8386

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery