Latest News :

ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் ‘கொலை’! - கோலிவுட்டின் பேசுப்பொருளானது
Tuesday July-19 2022

கடந்த ஒரு வாரமாக கோலிவுட்டில் பேசப்பட்டு வரும் டாப்பிக்குகளில் மிக முக்கிய இடத்தை பிடித்திருப்பது ‘கொலை’ திரைப்படம். “லைலாவை கொன்றது யார்?” என்ற ஹேஸ்டேக் சோசியல் மீடியாக்களில் டிரெண்டிங்காக, படத்தின் கதாப்பாத்திரங்களை வித்தியாசமான முறையில் அறிமுகம் செய்து  ஒட்டு மொத்த கோலிவுட்டையே பேச வைத்திருக்கிறது ‘கொலை’ படக்குழு. அவர்களுடைய வித்தியாசமான யுக்தியால் படம் பற்றிய செய்திகள் தீயாக பரவ, இதன் மூலம் சினிமா மீது ஆர்வம் இல்லாதவர்களுக்கு கூட படத்தை பார்க்கும் ஆர்வம் தூண்டப்பட்டுள்ளது.

 

விஜய் ஆண்டனி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ‘கொலை’ படத்தை பாலாஜி கே.குமார் இயக்க, இன்பினிட்டி பிலிம் வெஞ்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் கதாப்பாத்திரங்களில் அறிமுகம் புதிய முயற்சியாகவும், மக்களை கவர்ந்திழுக்கும் வகையிலும் இருந்தது.

 

மீனாட்சி சவுத்ரி நடித்த ‘லீலா’ கதாபாத்திரத்தின் அறிமுகத்துடன்  தொடங்கியது. இதைத் தொடர்ந்து, பான்-இந்திய பரபரப்பான நடிகர் முரளி சர்மா 'தி ஏஜென்ட் ஆதித்யா பாத்திரத்திலும், 'தி பாய்பிரண்ட், சதீஷ் பாத்திரத்தில் சித்தார்த்த ஷங்கர்,  'தி பாஸ், ரேகா' பாத்திரத்தில் ராதிகா சரத்குமார் அவர்களும்,  'புகைப்படக்காரர் அர்ஜுன்' பாத்திரத்தில் அர்ஜுன் சிதம்பரம், 'மேனேஜர் பப்லு' பாத்திரத்தில் கிஷோர் குமார் , 'பக்கத்து வீட்டுக்காரர் வினோத் பாத்திரத்தில் சம்கித் போஹ்ரா, 'தி காப் - மன்சூர் அலி கான்' பாத்திரத்தில் ஜான் விஜய், 'அப்ரண்டிஸ் சந்தியா' பாத்திரத்தில் ரித்திகா சிங் ஆகியோருடன்  'துப்பறியும் விநாயக்'  பாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். 

 

கதாபாத்திரங்களைப் பற்றிய சரியான தெளிவை பார்வையாளர்களுக்கு அளிக்கும் வகையில், தயாரிப்பாளர்கள் 'கொலை' படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இது அதன் உயர்தர காட்சிகள், கதாபாத்திரங்களின் புதுமையான அறிமுகம்,  ஒரு அற்புதமான இசையில் பழைய எவர்க்ரீன் பாடலான . 'புதிய பறவை'யிலிருந்து 'பார்த்த ஞாபகம் இல்லையோ' பாடலோடு, நம்மை கட்டிப்போடும் அளவு ஆரவத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. 

 

சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். செல்வா ஆர்.கே படத்தொகுப்பு செய்ய, கே.ஆறுமுகசாமி கலையை நிர்மாணித்துள்ளார். மகேஷ் மேத்யூ சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

 

கமல் போஹ்ரா, ஜி.தனஞ்செயன், பிரதீப்.பி, பங்கஜ் போஹ்ரா, டான் ஸ்ரீ துரைசிங்கம் பிள்ளை, சித்தார்த்தா சங்கர், ஆர்.வி.எஸ். அசோக் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் விஜய் ஆண்டனியின் வெற்றிப் படங்களின் வரிசையில் மற்றொரு மாபெரும் வெற்றி படமாக அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுக்கிறது.

Related News

8387

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery