Latest News :

ஒடிடி தளத்தில் சாதனை படைத்த ‘வீட்ல விசேஷம்’
Tuesday July-19 2022

ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்து, என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கிய ‘வீட்ல விசேஷம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், தற்போது ஒடிடி தளத்திலும் அதே வெற்றியை பெற்று பல சாதனைகளை படைத்து வருகிறது.

 

கடந்த ஜூலை 15 ஆம் தேதி ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியான இபப்டம் குறுகிய காலத்திற்குள் 2 கோடி ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்துள்ளது. பான்-இந்திய பிரம்மாண்ட திரைப்படங்களுக்கு மத்தியில், ஆர்.ஜே.பாலாஜியின் ’வீட்ல விசேஷம்’ வெளியான போதும் தற்போது ஓடிடி வெளியீட்டிலும்  ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தவறவில்லை. இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நேரத்தில் பொது பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பையும், நல்ல விமர்சனங்களையும் பெற்றது.

 

RJ பாலாஜி-NJ சரவணன் ஆகியோரின்  இயக்கம், அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி, மறைந்த நடிகை வி.எம்.சி. லலிதா மற்றும் பிற நடிகர்களின் அட்டகாசமான நடிப்பு இந்த படத்தின் முக்கிய ஈர்ப்பாக அமைந்தது. மேலும், வீட்ல விசேஷம் பார்வையாளர்கள் மத்தியில் ஒரு அதிரடியான வரவேற்பைக் கண்டது, மேலும் இதன் ஒரிஜினல் படைப்பான பதாய் ஹோ படத்தை விட சிறப்பாக இருப்பதாக  பாராட்டப்பட்டது.

 

நேர்த்தியான குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களுடன், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளின் கலவையும் இணைந்து இந்த திரைப்படத்திற்காக பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தந்தது. தவிர, ஜீ5 இல் இந்தப் படம் கிடைப்பதால், குடும்ப பார்வையாளர்கள் வீட்டிலிருந்தபடியே,  வீட்ல விசேஷம் படத்தை பார்க்கவும் கொண்டாடவும் அதிக இடத்தை உருவாக்கியுள்ளது. பார்வையாளர்களின் பாராட்டுக்கள் படத்திற்கு மிகப்பெரும் விளம்பரம் அமைந்துள்ளது.

 

ஜீ5 அசல் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள், வணிகரீதியான பிளாக்பஸ்டர்கள் மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படைப்புகளை வழங்குவதன் மூலம் திரைப்பட ஆர்வலர்களை தொடர்ந்து மகிழ்வித்து வருகிறது.  ஜீ5 தொடர் வெற்றி வரிசையில் வீட்ல விசேஷம் திரைப்படமும் தற்போது இணைந்துள்ளது. ஓடிடி தளங்களின் ஜீ5 உடைய மதிப்பை உயர்த்தியுள்ளது.

Related News

8389

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery