அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் கடந்த ஞாயிறு மாலை நடந்த துப்பாக்கி சூட்டில், 50 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதே இடத்தில் தான் தமிழ்ப் படமான ‘காவியன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்றுள்ளது. இதில் ஷாம், ஹாலிவுட் நடிகர் என பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.
ஸ்டிபன் க்ரைக் என்ற 64 வயது மனநலம் பாதிக்கப்பட்டவர் ஓட்டல் ஒன்றின் 34 வது மாடியில் நின்றுக்கொண்டு, அந்த கட்டடத்தின் கீழே நடந்துக் கொண்டிருந்த இசை விழாவில் கூடியிருந்த மக்களை நோக்கி இயந்திர துப்பாக்கியால் சுட்டுள்ளான். 50 பேரை பலிவாங்கிய இந்த சம்பவம் அமெரிக்கா மட்டும் இன்றி, உலக நாடுகளையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்த கொலையாளில் நின்று சுட்ட அதே தளத்தில் தான் ‘காவியன்’ படப்பிடிப்பிற்கான கேமரா வைக்கப்பட்டிருந்ததோடு, அன்றைய தினமும் துப்பாக்கி சுடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது.
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...
தென்னிந்தியாவில் சுயாதீன பாடல்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களை கவரும் துள்ளல் மற்றும் காதல் பாடலாக உருவாகியுள்ளது ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla)...