Latest News :

ஜெய் மிகப்பெரிய அர்ப்பணிப்பை கொடுத்துள்ளார் - ‘எண்ணித் துணிக’ படக்குழு பாராட்டு
Sunday July-24 2022

ஜெய், அதுல்யா ரவி, அஞ்சலி நாயர் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எண்ணித் துணிக’. எஸ்.கே.வெற்றி செல்வன் இயக்கியிருக்கும் இப்படத்தை ரைன் ஆஃப் ஏரோவ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சுரேஷ் சுப்பிரமணியன் தயாரித்துள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. 

 

நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் சாம் சி எஸ் பேசுகையில், “இந்த படத்தின் திரைக்கதை வித்தியாசமாக இருக்கும். இந்த படம் பார்ப்பவரை சீட் நுனிக்கு கூட்டிவரும். நான் மகிழ்ச்சியுடன் இந்த படம் செய்துள்ளேன். இந்த படம் எனக்கு பெரிய அனுபவமாக இருந்தது. இந்த படம் வெற்றி பெற வேண்டும் என பலர் நினைக்கின்றனர். ஜெய் மற்றும் அதுல்யா இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த படத்தில் இரண்டு காதல் பாடல்கள் இருக்கிறது. பாடல்வரிகள் சிறப்பாக வந்துள்ளது.” என்றார்.

 

நடிகை அதுல்யா பேசுகையில், “இந்த படம் இயக்குநர் வெற்றி உடைய கடின உழைப்பால் ஆனது. நடிகர் ஜெய் உடன் இணைந்து பணிபுரிந்தது சிறந்த அனுபவமாக இருந்தது.  படம் நன்றாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

 

நடிகர் ஜெய் பேசுகையில், “இந்த படத்தின் பெரிய பலம் இசை தான். இந்த படத்தில் முழுக்க முழுக்க அர்பணிப்புடன் பணியாற்றியுள்ளோம். இந்த படத்தின் பெரிய பலம் திரைக்கதை தான். இந்த படத்தில் எனக்கு அதிக ஸ்கோப் இருந்தது. இந்த படத்தில் எனது நல்ல நடிப்பிற்கு முழு காரணமும் இயக்குநர் தான். இயக்குநரின் அர்பணிப்பு எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. படம் பார்த்துவிட்டு நீங்கள் கூறுங்கள்.  நன்றி.” என்றார்.

 

இயக்குனர் வெற்றி செல்வன் பேசுகையில், “தமிழ்மொழிக்கு எனது முதல் நன்றியை கூறிகொள்கிறேன். இந்த படத்தை எனக்கு கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் சுப்ரமணியனுக்கு நன்றி. படத்தின் தலைப்பு தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தருக்கும் பொருந்தும். இசையமைப்பாளர் சாமுக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் உடன் பணியாற்றியது சந்தோசம். எனது நண்பன் இந்த படத்தில் எடிட்டராக பணிபுரிந்தது மகிழ்ச்சி. அதுல்யா பெரிய உழைப்பை தந்துள்ளார். நடிகர் ஜெய் இந்த படத்திற்கு பெரிய உழைப்பையும், அர்பணிப்பையும் கொடுத்தார்.  படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி“ என்றார்.

 

Yenni Thuniga

 

இயக்குனர் ஆர் வி உதயகுமார் பேசுகையில், “உள்ளடக்கம் சிறப்பாக உள்ள படங்களை உலகம் முழுவதும் ரசிப்பார்கள். இந்த படத்திற்காக எவ்வளவு போராடினார்கள் என எனக்கு தெரியும். படத்தில் ஜெய் பிரமாதமாக நடித்துள்ளார். இது ஒரு நேர்த்தியான திரைப்படம். இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள்.” என்றார்.

 

மிர்ச்சி சிவா பேசுகையில், “இயக்குநர் என்னை தொடர்ந்து அழைத்து இந்த விழாவிற்கு வரவழைத்தார். தீபாவளிக்கு போன் செய்தால் பொங்கலுக்கு போன் எடுப்பார் ஜெய். போனை அவ்வாறு தான் பயன்படுத்துவார். ஜெய் மிகவும் அர்பணிப்பான நடிகர். ஜெய் மிகபெரிய உயரத்தை அடைவார் அவருக்கு எனது வாழ்த்துகள் . இயக்குநர் கடின உழைப்பாளி என அனைவரும் கூறினார்கள். அவருக்கு எனது வாழ்த்துகள்.” என்றார்.

 

இயக்குனர் வசந்த் பேசுகையில், “நன்றியுணர்வு அதிகம் இருப்பவர் இயக்குனர் வெற்றி, அவர் மிகப்பெரிய வெற்றியடைவார். வெற்றியின் இந்த படத்திற்கு, நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஒளிப்பதிவாளர் தினேஷ் மிகச்சிறந்த கேமராமேன், அவருடைய லைட்டிங், காம்போசிசன் எல்லாம் மிகச்சிறப்பாக இருக்கும். ஆடை வடிவமைப்பாளர், இசையமைப்பாளர், எடிட்டர் என அனைவரும் சிறந்த உழைப்பினை கொடுத்துள்ளனர். முதல் பட இயக்குனர் இயக்கும் போல் இந்த படம் இல்லை. இதை படமாக்கிய விதம் அற்புதமாக இருக்கிறது. இந்த மேடையில் இருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.” என்றார். 

 

தயாரிப்பாளர் சுரேஷ் சுப்ரமணியன் பேசுகையில், “இயக்குனர் வெற்றியை பார்த்த போதிலிருந்தே அவர் திறமை மிக்கவர் என எனக்கு தெரியும். இந்த படத்திற்கு ஜெய்யும், அதுல்யாவும் கொடுத்த பங்களிப்பு மிகப்பெரியது. அதற்கு நன்றியை கூறிகொள்கிறேன். தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்திற்கு பெரிய பலம். கண்டிப்பாக இந்த திரைப்படம் உங்களுக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கும். அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

க்ரிகெஸ் சினி கிரியேஷன்ஸ் ஸ்ரீதரன் மரியதாசன் பேசுகையில், “இப்படம் மிக அற்புதமாக வந்துள்ளது. வெற்றி மிக நல்ல ஒரு படத்தை தந்துள்ளார். இப்படத்தில் நானும் இணைந்தது மகிழ்ச்சி. தமிழகத்தில் பெரிய எண்ணிகையிலான திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.” என்றார்.

Related News

8397

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery