Latest News :

வெப் தொடராக உருவாகும் சென்னையை உலுக்கிய கொலை சம்பவம்!
Tuesday July-26 2022

1944 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தில் நடந்த கொலை வழக்கு ஒன்றை மையமாக கொண்டு உருவாகும் வெப் தொடர் ‘மெட்ராஸ் மர்டர்’ ((THE MADRAS MURDER). பிரபல ஒடிடி தளமான சோனி லிவ்-க்காக உருவாகும் இந்த வெப் தொடரை பிக் பிரிண்ட்ஸ் பிக்சர்ஸ் சார்பில் ஐ.பி.கார்த்திகேயன் தயாரிக்கிறார். இயக்குநர் ஏ.எல்.விஜய் ஷோவ் ரன்னராக செயல்படுகிறார்.  இத்தொடரின் கதை, திரைக்கதை எழுதி சூரிய்பிரதாப்.எஸ் இயக்குகிறார்.

 

மிகப்பெரிய  பொருட் செலவில் பிரம்மாண்டமாக தயாராக இருக்கும் இந்த வெப் தொடரில் நடிக்கவிருக்கும் நடிகர்-நடிகையர்கள் மற்றும் இதில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இந்த வெப் தொடர், உண்மைச் சம்பவங்களை அடிப்படியாக கொண்டு உருவாக்கப்படுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அதன்படி கொல்லப்பட்ட அந்த நபர் 1940-களில் பிரபலமான ஒரு பத்திரிக்கையாளர் என்றும், அந்த கொலை வழக்கில் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் சம்மந்தப்பட்டிருப்பதாகவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அந்த வகையில் 1944-ஆம் ஆண்டு மெட்ராஸ் புரசைவாக்கத்தில் கத்தியால் குத்தி கொலை செய்யபட்ட பிரபல மஞ்சள் பத்திரிக்கையாளர் லட்சுமிகாந்தனின் கொலை வழக்கு மற்றும் அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறை சென்ற தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரின் தொடர்பு பற்றிய கதையாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இன்று வரை லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பல அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுகள் இருக்கிறன. மேலும், லட்சுமிகாந்தனை கொலை செய்தது யார்? என்பது இன்று வரை விடை தெரியாத புதிராகவே உள்ளது. இந்த வெப் தொடர் அந்த புதிர்களுக்கும், மர்மங்களுக்கும் விடை கொடுக்குமா?என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

 

இந்த வெப் தொடருக்கான முன்தயாரிப்பு பணிகள் முடிவடைந்து,விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாக தெரியவந்துள்ளது.

Related News

8401

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery