Latest News :

உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ டிரைலர் வெளியானது
Wednesday July-27 2022

அமீர்கானின் கனவு திரைப்படமான ‘லால் சிங் சத்தா’ வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்திய மொழிகள் மட்டும் இன்றி வெளிநாட்டு மொழிகளிலும் வெளியாக உள்ள இப்படத்தின் தமிழ் பதிப்பை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுவதால் தமிழகத்திலும் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம், தொடக்கத்திலிருந்து தமிழ் சினிமாவிற்கு பொருத்தமான மற்றும் முக்கியமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறது. இந்த பட்டியலில் அமீர்கானின் ‘ லால் சிங் சத்தா’வும் இணைந்திருக்கிறது. 

 

இந்த நிலையில், ‘லால் சிங் சத்தா’ திரைப்படத்தின் தமிழ் பதிப்பின் முன்னோட்டம் தற்போது வெளியாகியிருக்கிறது. இதன் மூலம் நடிகர் அமீர்கான் தமிழ் ரசிகர்களிடத்திலும் நட்சத்திர நடிகராக அறிமுகமாகி, பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.  

 

அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ படத்தின் முன்னோட்டம் இந்தியில் வெளியாகி, சாதனை படைத்து வருகிறது. அவரின் உலக அளவிலான ரசிகர்கள், அவரது கதாப்பாத்திரத்தை திரையில் காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இப்படத்தின் பாடல்களும் வெளியாகி, இணையத்தில் பெரிய அதிர்வை ஏற்படுத்தி, ட்ரெண்டிங்கில் தொடர்ந்து இருக்கிறது. மேலும் படக்குழுவினர், படத்தின் ஆத்மார்த்தமான உணர்வை தாங்கியிருக்கும் பாடல்களையும் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த இசையில் பங்களிப்பை வழங்கியிருக்கும் பாடலாசிரியர்கள், இசைக்கலைஞர்கள், இசையமைப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு இன்று பொதுவெளியில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.  

 

 

அமீர்கான் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கிரண் ராவ் மற்றும் வயாகம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் ‘லால் சிங் சத்தா’ படத்தில், அமீர்கானுடன் கரீனா கபூர் கான், மோனா சிங், சைதன்யா அக்கினேனி ஆகியோரும் நடித்துள்ளனர். 

 

இந்தத் திரைப்படம் ஆங்கிலத்தில் வெளியான ‘ஃபாரஸ்ட் கெம்ப்’ எனும் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

8403

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery