‘கொம்பன்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் ‘விருமன்’. 2டி சார்பில் சூர்யா தயாரிக்கும் இப்படத்தில் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சரண்யா, கருணாஸ், சூரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள “கஞ்சா பூவு கண்ணாலே...” பாடல் வெளியாகி வைரலான நிலையில் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை ரசிகர்கள் முன்னிலையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி மதுரை, ராஜா முத்தையா அரங்கத்தில் பிரம்மாண்டமான முறையில் விழா நடத்தி அதில் ரசிகர்கள் முன்னிலையில் ‘விருமன்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் பாரதிராஜா, ஷங்கர், நடிகர் சூர்யா, 2டி இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க இருக்கிறார்கள்.
’விருமன்’ படத்தின் இரண்டு பாடல்களுக்கு மேடையில் நடனக் கலைஞர்கள் நடனமாட இருக்கிறார்கள். மேலும் ஒரு பாடலுக்கு நடன இயக்குநர் சாண்டி குழுவினரும் மற்றொரு பாடலுக்கு விஜய் டிவி அமீர் - பாவனி ஜோடி நடனம் இடம்பெற உள்ளது.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...