‘கே.ஜி.எப்’ பெற்ற வெற்றியை தொடர்ந்து கன்னட திரைப்படங்கள் அனைத்தும் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாகி வருகிறது. அந்த வகையில், கன்னடத்தில் உருவாகி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் வெளியாக இருக்கும் படம் ‘விஜயானந்த்’.
இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் கர்நாடக தொழிலதிபர் விஜய் சங்கேஷ்வரின் வாழ்க்கை வரலாறு ‘விஜயானந்த்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் தமிழ் டீசர் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
புகழ்பெற்ற வி.ஆர்.எல் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநராகவும் மற்றும் விளம்பரதாரர் லாஜிஸ்டிக்ஸ், மீடியா மற்றும் பல துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர் டாக்டர்.ஆனந்த் சங்கேஷ்வர். இவர் இப்போது வி.ஆர்.எல் பிலிம் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பு தான் ‘விஜயானந்த்’.
இப்படம் குறித்து டாக்டர்.ஆனந்த் சங்கேஷ்வர் கூறுகையில், ”எங்கள் தயாரிப்பு நிறுவனம் ’விஜயானந்த்’ என்ற முதல் திரைப்பட முயற்சியை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இது ஒரு வாழ்க்கை வரலாற்றுப்படம் ஆகும். என் தந்தையும் மரியாதைக்குரிய பிரபல தொழில் அதிபருமான விஜய் சங்கேஷ்வர். 1976 இல் ஒரு சிங்கிள் டிரக் மூலம் தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கியவர். இன்று தேசம் முழுக்க அறியப்பட்ட பிரபல தொழிலதிபர். சிறிய அளவில் தொடங்கி வளர்ந்த அவரது கதையில், அவரது வளர்ச்சிப் பாதையில் ஒரு வாரிசாக ஆனந்த் சங்கேஷ்வராகிய நானும் இடம் பெறுகிறேன் என்பதில் எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் இப்படத்தை தமிழிலும் வெளியிடுவது உள்ளபடியே பெருமிதமாக உணர்கிறேன். ஒரு வரலாற்றுப் படம் மற்ற மொழிகளில் டப் ஆகி வெளிவருவது என்பது இதுவே முதல்முறை ஆகும். அந்தப் பெருமையை எங்கள் ’விஜயானந்த்’ தட்டிச்செல்வதில் எங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி” என்றார்.
’டிரங்க்’ என்ற ஹாரர் திரில்லர் படத்தை இயக்கிய ரிஷிகா சர்மா இயக்கியுள்ள இப்படத்தில் ’ட்ரங்க்’ படத்தின் நாயகன் நிஹால், விஜய் சங்கரேஷ்வராக நடிக்கிறார். மற்றும் அனந்த் நாக், வினயா பிரசாத், வி ரவிச்சந்திரன், பிரகாஷ் பெலவாடி, அனிஷ் குருவில்லா,சிரி பிரஹலாத் மற்றும் பரத் போபண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கோபி சுந்தர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரகு நிடுவள்ளி வசனம் எழுதியுள்ளார். ரவிவர்மா ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்க, கீர்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்துள்ளார். இம்ரான் சர்தாரியா நடனம் அமைக்க, ஹேமந்த் படத்தொகுப்பு செய்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில், சிலம்பரசன் டி...
சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது...
அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...