’மாநாடு’, ‘டான்’ என தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘கடமையை செய்’. இதில் ஹீரோயினாக யாஷிகா ஆனந்த் நடித்திருக்கிறார். கணேஷ் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் நஹர் பிலிம்ஸ் சார்பால டி.ஆர்.ரமேஷ் மற்றும் ஜாகிர் உசேன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை வெங்கட் ராகவன் எழுதி இயக்கியுள்ளார்.
வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கடமையை செய்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் எஸ்.ஜே.சூர்யா, யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் கே.ராஜான் கலந்துக்கொண்டார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் எஸ்.ஜே.சூர்யா, “இந்த படத்தில் நான் நடிப்பதற்கு காரணம் தயாரிப்பாளர்கள் ரமேஷ் மற்றும் ஜாகிர் உசேன் இருவரும் தான். அவர்கள் எனக்கு நீண்ட நாள் நண்பர்கள், அவர்களுக்காக ஒரு படம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இருந்தாலும் நல்ல கதையாக இருந்தால் செய்யலாம் என்று சொன்னேன். அதன்படி அவர்கள் பல கதைகளை எனக்கு அனுப்பினார்கள். ஆனால், எதுவும் செட்டாகவில்லை. பிறகு தான் வெங்கட் இந்த கதையை சொன்னார்.
இந்த படம் மேக்கிங்கில் மிரட்டும், இல்லை கே.ஜி.எப் போன்ற பிரம்மாண்ட ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஆனால், இந்த படத்தில் இருக்கும் கண்டெண்ட் இதுவரை எந்த ஒரு படத்திலும் இல்லாதது. தமிழ் சினிமா இல்லை இந்தி சினிமா என்று எந்த சினிமாவிலும் இப்படி ஒரு கண்டெண்ட் உள்ள படம் வரவில்லை. அதனால் தான் இந்த படத்தில் நான் நடிக்க சம்மதித்தேன். என் மனதுக்கு பிடித்ததை மட்டுமே நான் செய்வேன். அந்த வகையில், இந்த படத்தின் கண்டெண்ட் புதுமையாக இருந்ததால் தா நான் நடித்தேன்.
இந்த படத்தில் நடித்த யாஷிகா ஆனந்துக்கு வேறு ஒரு இமேஜ் இருக்கிறது. ஆனால், கடமையை செய் படத்திற்குப் பிறகு அவருக்கு நல்ல நடிகை என்ற இமேஜ் கிடைக்கும். ரம்பா, சிம்ரன் போல பெரிய நடிகையாக யாஷிகா ஆனந்த் வருவாங்க. இயக்குநர் வெங்கட் மிக நேர்த்தியாக படத்தை கையாண்டிருக்கிறார். என் நடிக்கும் படங்களில் நடிப்பதை மட்டும் தான் பார்ப்பேன். இயக்குநர்களின் பணிகளில் தலையிட மாட்டேன். இந்த கதையை எந்த அளவுக்கு சிறப்பாக எடுக்க முடியுமோ அந்த அளவுக்கு வெங்கட் எடுத்திருக்கிறார்.
தற்போதைய காலக்கட்டத்தில் பிரம்மாண்டமான ஆக்ஷன் படங்கள் ஓடுகிறது. அதே சமயம் டான் போன்ற செண்டிமெண்ட் படங்களும் ஓடுகிறது. இதற்கு காரணம் நல்ல கதை. நல்ல கண்டெண்ட் இருந்தா அந்த படங்கள் ஓடும். ரசிகர்கள் என்றுமே நல்ல படங்களை கைவிட மாட்டார்கள். அந்த வகையில் ‘கடமையை செய்’ படம் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என்றார்.
படத்தின் இயக்குநர் வெங்கட் ராகவன் பேசுகையில், “இப்படத்தில் பல புதுமையான விஷயங்களை சொல்லி காட்சிக்கு காட்சி சுவாரசிய படுத்தி உள்ளோம். இது நிச்சயமாக ரசிகர்களை மிகவும் கவர்ந்து மிகப்பெரிய அளவில் எல்லா மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு பிரம்மாண்ட வெற்றி காணும், அளவிற்கு அனைவரும் தங்கள் கடமையை செய்துள்ளார்கள்.” என்றார்.
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் முன்னாள் மக்கள் தொடர்பாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான பி...
ப்ராமிஸ் என்ற சொல்லுக்கு சத்தியம், உத்திரவாதம் ,உறுதி என்ற பல்வகையான பொருள் படும்...
காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, தொடர்ந்து அடங்காத ப்ளாக்பஸ்டர் வெற்றிப் பாய்ச்சலுடன், மீண்டும் பாக்ஸ் ஆஃபிஸை அதிரவைக்க தயாராக உள்ளார்...