தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64 வது பொதுக்குழு கூட்டம் வரும் அக்டோபர் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-வது பொதுக்குழு கூட்டம் வரும் அக்டோபர் 8 ஆம் தேதி ஞாயிறு, மதியம் 2 மணிக்கு சென்னை அண்ணா சாலையிலுள்ள காமராஜர் அரங்கில் நடைபெறும். இதற்கான அழைப்பு அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கபட்டுள்ளது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் சங்க உறுப்பினர்களான முன்னணி நடிகர் நடிகைகள் மூத்த நாடக மற்றும் திரைப்பட நடிகர் நடிகைகளும் கலந்து கொள்கிறார்கள். நடிகர் சங்கம் தலைவர் M.நாசர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பொது செயலாளர் விஷால் வரவேற்புரை நிகழ்த்துவார். துணை தலைவர் கருணாஸ் 2016-2017-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு, செலவு கணக்குகளை வாசித்து ஒப்புதல் பெறுவார். பொருளாளர் கார்த்தி எதிர்கால பொருளாதார திட்டமிடல் பற்றிய விளக்க உரை நிகழ்த்த, பொதுச் செயலாளர் விஷால் சங்கத்தின் கடந்த கால செயல்படுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி விளக்கி கூட்டத்தில் ஒப்புதல் பெறுவார். அதனை தொடர்ந்து தலைவர் நாசர் தலைமை உரையாற்றுவார். துணை தலைவர் பொன்வண்ணனின் நன்றி உரையுடன் பொதுக்குழு கூட்டம் நிறைவு பெறும்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களது உறுப்பினர் அடையாள அட்டையுடன் வந்து தவறாமல் பங்கேற்க வேண்டுமென்றும் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...