Latest News :

ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருக்கும் முதல் வெப் சீரிஸ்! - சோனி லிவ் ஒடிடி தளத்தில் வெளியாகிறது
Wednesday August-10 2022

தமிழ் சினிமாவில் பழம் பெரும் தயாரிப்பு நிறுவனமாக திகழும் ஏ.வி.எம் இணைய தொடர் தயாரிப்பின் மூலம் ஒடிடி தளத்தில் நுழைந்துள்ளது. அந்நிறுவனம் தயாரித்திருக்கும் முதல் இணைய தொடரான ‘தமிழ் ராக்கர்ஸ்’ சோனி லிவ் ஒடிடி தளத்தில் வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி வெளியாகிறது.

 

மொத்தம் 8 பகுதிகளை கொண்ட இந்த இணைய தொடரில் அருண் விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஈரம், வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 போன்ற வெற்றி படங்களை இயக்கிய அறிவழகன் இத்தொடரை இயக்கியுள்ளார்.

 

திரைப்படத்துறையின் மிகப்பெரிய பிரச்சனை பைரசி. திருட்டு விசிடி மூலம் ஒரு தயாரிப்பாளரின் பல கோடி மதிப்புள்ள பொருளையும், உழைப்பையும் சர்வசாதரணமாக ஒரு கும்பல் கொள்ளையடித்துக் கொண்டிருக்க, தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் அத்தகைய திருட்டு ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. இத்தகைய திருட்டில் முதன்மை குற்றவாளியாக திகழும் தமிழ் ராக்கர்ஸ் என்ற தளம் தமிழ் சினிமாவையே தடம் புரளும் அளவுக்கு பல திரைப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிட்டு வருகின்றது. ஆனால், இவர்களை இதுவரை யாராலும் தடுக்கவும் முடியவில்லை, கண்டுபிடித்து தண்டிக்கவும் முடியவில்லை.

 

இதனால் பல திரைப்பட தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த தமிழ் ராக்கர்ஸ் என்ற தலைப்பை வைத்துக்கொண்டு பைரசியின் பின்னணியையும், அதனால் பாதிக்கப்படும் தயாரிப்பாளர்களின் அவல நிலையையும் விவரிக்கும் விதமாக உருவாகியிருக்கும் தமிழ் ராக்கர்ஸ் இணைய தொடரின் கதை மற்றும் திரைக்கதையை  மனோஜ் குமார் கலைவானன் மற்றும் ராஜேஷ் மஞ்சுநாத் ஆகியோர் எழுதியுள்ளனர்.

 

இத்தொடர் குறித்து கூறிய ஏ.வி.எம் நிறுவனத்தின் அருணா குகன், “தமிழ் ராக்கர்ஸ் ஒரு நல்ல ஆழமான கதை களத்தை கொண்டது. நாங்கள் மிக தீவிரமான ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளோம். இதன் மூலம், கலை துறையினர் படும் இன்னல்கலை பல்வேறு கோணங்களில் இருந்து ஆழமாக காட்டிஉள்ளனர். சோனி லிவ் நிறுவனத்தினை தனது ஒளிப்பரப்பு பங்குதாரராக கொண்டது எங்களுக்கு பலத்தினை மேலும் கூட்டியிள்ளது. தொலைநோக்கு சிந்தை உள்ள இயக்குனர் அறிவழகன் மற்றும் நடிகர் அருண் விஜய் எங்களுடன் இணைந்தது மேலும் ஒரு கூடுதல் பலத்தினை தந்ததுடன் மட்டும் இல்லாமல், மக்களுக்கு ஒரு உணர்வு பூர்வமான ஒரு பந்தத்தினை ஏற்படுத்தும் எனும் நம்பிக்கையினை ஏற்படுத்தி உள்ளது.” என்றார்.

 

இயக்குநர் அறிவழகன் கூறுகையில், “பைரசி, ஹால் காபி, டோரன்ட் டவுன்லோட் போன்ற வார்த்தைகள் என்ன தான் கேள்வி பட்டதாக இருந்தாலும், அதனால் கலை உலகில் ஏற்படும் வலிகள் மற்றும் வேதனைகள் உலகிற்கு தெரியாது. தமிழ் ராக்கர்ஸ் ஒரு சுவாரஸ்மான திரில்லர் மூலம் அருண் விஜய் தனது ருத்ரா எனும் கதா பாத்திரம் மூலம் மக்களை பைரசி உலகத்தின் சவால்களுக்கு அழைத்து செல்கிறது.” என்றார்.

 

நடிகர் அருண் விஜய் கூறுகையில், “இந்த தொடரின் பகுதியாக இருப்பது ஒரு மிக பெரிய அனுபவமாக இருந்தது. சமுதாயத்திற்கு தேவைப்படும்  தொடராக இதனை பார்க்கிறேன். செய்தி திருட்டு என்பது காலம் காலமாக கலை உலகில் தொடர்ந்து கொண்டிருக்கின்றதும். இந்த தொடர் திரை உலகில் பைரசி எந்த அளவுக்கு ஊடுருவி உள்ளது என்பதை வெளிக்காட்டும். மற்றும் எனது கதாபாத்திரமான ருத்ரா என்பவன் எப்படி இதனை முடிவிற்கு கொண்டு வருகின்றான் என்பதே கதை. எனவே நான் மிகவும் ஆவலுடன் இந்த தொடரை சோனி லிவ் இல் காண்பதற்கு காத்திருக்கின்றேன். திறை துறையில்  அனுபவம் வாய்ந்த படைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.” என்றார்.

Related News

8430

தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும் தான் ‘பராசக்தி' - சிவகார்த்திகேயன்!
Friday January-09 2026

தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...

’ஜன நாயகன்’ பட வழக்கின் தீர்ப்பு நாளை காலை வழங்கப்படுகிறது!
Thursday January-08 2026

விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...

50 வது வருடத்தில் மீண்டும் படம் இயக்கும் கே.பாக்யராஜ்!
Wednesday January-07 2026

நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...

Recent Gallery