ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் படம் ‘சீதா ராமம்’. தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் கடந்த வாரம் வெளியான இப்படம் அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
வைஜெயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் துல்கர் சல்மான், பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க காதலை மையப்படுத்திய இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதோடு பத்திரிகையாளர்களிடமும் பாராட்டு பெற்றுள்ளது.
இந்த நிலையில், கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான ‘சீதா ராமம்’ வார இறுதி நாட்களில் மட்டும் ரூ.25 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. மேலும், இந்திய பாக்ஸ் ஆபீஸை தாண்டி அமெரிக்க பாக்ஸ் ஆபீஸிலும் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் இப்படம் எதிர்ப்பார்க்கப்பட்டதை விட அதிகம் வசூலை ஈட்டும் என்று திரையுலகினர் கணித்துள்ளனர்.
திரையில் மாயாஜாலம் நிகழ்த்தும் காதல் ஜோடிகளான துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகியோரின் தனித்துவமான நடிப்பு, இயக்குவர் ஹனுராகவபுடியின் பிரத்யேகமான எழுத்து மற்றும் இயக்கம், விஷால் சந்திரசேகரின் மயக்கும் இசை, பி எஸ் வினோத்தின் பிரமிக்கத்தக்க ஒளிப்பதிவு, ஸ்வப்னா சினிமா - வைஜெயந்தி மூவிஸ் போன்ற முன்னணி படத் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் வெளியீடு, ஆகிய காரணங்களுக்காகவும் இப்படத்தினை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...
இயக்குநர் மணிரத்னத்தின் சீடரான ஆர்...
ஆல்பம் பாடல்களான “கச்சி சேரா”, “ஆச கூடா”, “சித்திர புத்திரி” போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார்...