முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் ‘விருமன்’ ரசிகர்களின் பேராதரவால் முதல் நாளில் எதிர்ப்பார்த்ததை விட கூடுதலான வசூலை பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம், வெளியிட்ட அனைத்து திரையரங்குகளிலும் முதல் நாள் வசூல், 'கடைக்குட்டி சிங்கம்' படத்திற்கு கிடைத்த வசூலை விட மூன்று மடங்கு கூடுதல் வசூல் கிடைத்திருப்பதால் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்டுள்ள விநியோகஸ்தர் சக்திவேலன் உற்சாகமடைந்துள்ளார்.
இதையடுத்து, படத்தின் நாயகன் கார்த்தி, இயக்குநர் முத்தையா, இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் ஆகியோருக்கு சக்தி பிலிம் ஃபேக்டரி சக்திவேலன் மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளார்.
மேலும், இயக்குநர் முத்தையா - நடிகர் கார்த்தி கூட்டணியின் முதல் படமான ‘கொம்பன்’ படத்தை விட ‘விருமன்’ பல மடங்கு வசூலித்து சாதனை நிகழ்த்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...