Latest News :

கிரிக்கெட்டை மையமாக வைத்து படம் தயாரிக்கும் பா.இரஞ்சித்!
Tuesday August-16 2022

இயக்குநர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பல படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில், கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து பா.இரஞ்சித் நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் படம் தயாரிக்கிறார். லெமன் லீல் கிரியேஷன்ஸ் சார்பில் கணேசமூர்த்தி இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

 

இந்த படத்தில் அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜெய்குமார் இயக்குகிறார்.

 

’O2’, ‘தம்மம்’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த தமிழழகன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். தமிழ்பிரபா மற்றும் ஜெய்குமார் இணைந்து திரைக்கதை, வசனம் எழுதுகின்றனர்.

 

தமிழகத்தின் நகரங்கள் , ஊர்களின் கிரிக்கெட் விளையாட்டின் உணர்வுப்பூர்வமான ஒரு வாழ்வியலையும் , நட்பு , கொண்டாட்டங்களையும் ஜனரஞ்சகமாக அனைவரும் ரசிக்கும் படியான கதையமைப்பில் சொல்ல வரும் இப்படத்தின் படப்பிடிப்பு அரக்கோணம்  சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

Related News

8438

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் வெளியானது!
Tuesday March-17 2026

சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது...

’எஸ்.கே.எஸ்’ பட முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
Monday March-16 2026

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

Recent Gallery