தமிழ் பிக் பாஸின் முதல் சீசன் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இரண்டாம் சீசனை மிக பிரம்மாண்டமான முறையில் நடத்த விஜய் டிவி திட்டமிட்டுள்ளது. அதேபோல், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததானல், பிரபலங்கள் பிக் பாஸில் கலந்துக்கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இதனை பயன்படுத்தி, முதல் சீசனை காட்டிலும், இரண்டாவது சீசனில் மக்களிடன் நன்றாக பரிச்சயமானவர்களை பங்கேற்க வைக்க விஜய் டிவி முடிவு செய்துள்ளதோடு, அதற்கான பணிகளையும் கச்சிதமாக முடித்துவிட்டது.
இந்த நிலையில், பிக் பாஸின் இரண்டாம் சீசனை நடிகர் சூர்யா தொகுத்து வழங்கப் போவதாகவும், வரும் தீபாவளி முதல் பிக் பாஸ் தமிழ் - சீசன் 2 தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. இது குறித்து விஜய் டிவி நிர்வகத்திடம் நமது நிருபர் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, தீபாவளிக்கு இல்லை ஆனால் விரைவில் சீசன் 2 தொடங்கப் போகிறது, என்ற பதில் வந்தது.
அப்படியானால், இந்த மாதம் தொடங்குமா? என்று கேட்டதற்கு, விரைவில் தொடங்கும் அது எப்போது என்று நாங்களே சொல்கிறோம், என்று கூறியவர்கள், இந்த மாதம் தொடங்குகிறதா? என்பதற்கு ஆமாம் என்று சொல்லவில்லை, அதே சமயம் மறுக்கவும் இல்லை.
தீபாவளி பண்டிகையும் இந்த மாதம் தான் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...