Latest News :

’விருமன்’ செய்த வசூல் சாதனை! - படக்குழுவினருக்கு வைரக்காப்பு பரிசளித்த சக்திவேலன்
Thursday August-18 2022

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘விருமன்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதோடு, வசூல் ரீதியாகவும் பல சாதனைகளை நிகழ்த்தி வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரித்துள்ள 'விருமன்' படம் வெளியான ஐந்து நாட்களில் உலக அளவில் 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, வசூல் சாதனை படைத்து வருகிறது. இதனை கொண்டாடும் வகையில்சென்னையில் வெற்றி விழா நடைபெற்றது. இதில் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்துக்கொண்டு விருமன் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

 

மேலும், படத்தை தமிழகம் முழுவதும் சக்தி பிலிம் பேக்டரி சார்பில் வெளியிட்ட பி.சக்திவேலன் படம் எதிர்ப்பார்த்ததை விட பல மடங்கு வசூல் செய்து வருவதால் உற்சாகமடைந்துள்ளார். இதையடுத்து விருமன் வெற்றி விழாவில் நாயகன் கார்த்தி, தயாரிப்பாளர் சூர்யா, இணை தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் ஆகியோருக்கு சக்திவேலன் வைரக்காப்பு பரிசளித்தார். மேலும், படத்தின் இயக்குநர் முத்தையாவுக்கு வைர மோதிரம் பரிசளித்துள்ளார்.

 

Viruman Success

 

நடிகர் சூர்யா 'விக்ரம்' படத்தில் நடித்ததற்காக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களிடமிருந்து விலையுயர்ந்த ரோலக்ஸ் கைகடிகாரத்தை பரிசாக பெற்றிருந்தார் என்பதும், தற்போது 'விருமன்' படத்திற்காக விநியோகஸ்தர் சக்திவேலனிடமிருந்து வைர காப்பினை பரிசாக பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related News

8445

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் வெளியானது!
Tuesday March-17 2026

சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது...

’எஸ்.கே.எஸ்’ பட முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
Monday March-16 2026

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

Recent Gallery