Latest News :

59 விருதுகளை வென்ற ‘சஷ்தி’ குறும்படம்!
Friday August-19 2022

ஜூட் பீட்டர் டேமியான் எனவர் கதை எழுதி இயக்கியிருக்கும் குறும்படம் ‘சஷ்தி’. 30 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படத்தை Cathy & Raphy பிலிம்ஸ் தயாரித்துள்ளது.  தாய்க்கும் மகனுக்குமான உறவை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த குறூம்படம், ஆகஸ்ட் 15 ஆம் தேதி ட்யூன்ஸ் மற்றும் கூகுள் பிளே ஆகியவற்றில் வெளியானது.

 

தான் வளர்ப்பு மகன் என்பதை அறியாமலேயே வளரும் சிறுவன் ஒருவன், சாதாரண பெண்ணாக இருக்கும் ஒருவரை எப்படி கடவுள் என நினைக்கும் அளவுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரை பற்றிய அவனுடைய அபிப்ராயங்கள் எப்படி மாறுகின்றன என்பதை அழகாக சொல்கிறது இந்த குறும்படம். இந்த படம் லைவ் ஆடியோ ரெக்கார்டிங் முறையில் உருவாகியுள்ளது தனிச்சிறப்பு.

 

செம்மலர் அன்னம், லிசி ஆண்டனி, மாஸ்டர் ஜெப்ரி ஜேம்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த குறும்படம் டோக்கியோ முதல் டொராண்டோ வரை , 25 திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் 59 விருதுகளை வென்றுள்ளது.

 

“30 நிமிடங்களுக்கு குறைவான நேரமே ஓடக்கூடிய இந்த குறும்படத்தை ஒரே வாரத்தில் படமாக்கி முடித்து விட்டாலும் இதற்கான கதை மற்றும் திரைக்கதையை உருவாக்க கிட்டத்தட்ட ஒரு வருட காலம் ஆனது” என்கிறார் இயக்குநர் ஜூடு பீட்டர் டேமியன்.

 

அடிப்படையில் ஒரு சார்டட் அக்கவுண்டன்ட் ஆன ஜூட் பீட்டர் டேமியான் கிட்டத்தட்ட அதே துறையில் 30 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். திரைப்பட இயக்கம் மீது இருக்கும் ஆர்வத்தால் எல்வி பிரசாத் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து இயக்கம் கற்றுக்கொண்டவர். தனது முதல் படைப்பாக இந்த ‘சஷ்தி’ என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளார்.

 

இந்த குறும்படத்தை https://apple.co/3PpIXnJ என்கிற லிங்க் மூலம் iTunesலும் https://bit.ly/3JXXoOD என்கிற லிங்க் மூலம் Google Playயிலும் காணலாம்.

Related News

8446

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் வெளியானது!
Tuesday March-17 2026

சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது...

’எஸ்.கே.எஸ்’ பட முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
Monday March-16 2026

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

Recent Gallery