Latest News :

ஹாட்ஸ்டாருடன் இணைந்த ராக் ஸ்டார் அனிருத்! - பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி அறிவிப்பு
Saturday August-20 2022

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக மட்டும் இன்றி இளசுகளின் மனசை கொள்ளையடிக்கும் இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத், சினிமா துறையில் தனது 10 வது ஆண்டைக் கொண்டாடும் விதமாக இந்தியாவில் தனது முதல் இசை நிகழ்ச்சியை அறிவித்துள்ளார்.

 

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் உடன் இணைந்து அனிருத் இந்தியாவில் முதல் முறையாக நடத்த இருக்கும் மியூசிக் கான்செர்ட் நிகழ்ச்சிக்கு ‘ராக்ஸ்டார் ஆன் ஹாட்ஸ்டார் - ஒன்ஸ் அப்பான் எ டைம் கான்சர்ட்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிகளின் தேதிகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், செப்டம்பர்-அக்டோபர் 2022 மாதங்களில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் இந்த இசை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

கோயம்புத்தூரில் நடைபெறவுள்ள நிகழ்ச்சி  ஒரு லைவ்-இன் இசை நிகழ்ச்சியாக திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் சென்னை நிகழ்ச்சியானது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில்,  முழு இசை நிகழ்ச்சியும் நேரலையாக ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது. இது இந்தியாவில் மிகப்புதுமையான முதல் வகை அனுபவமாக இருக்கும். மற்ற நகரங்களைச் சேர்ந்த இசை ஆர்வலர்கள்,  ராக்ஸ்டார் அனிருத்தின் தீவிர ரசிகர்கள் ஆகியோரும், தங்கள் டிஜிட்டல் சாதனங்கள் மூலம்  நேரலையில்  இந்த இசை நிகழ்ச்சியை காணும் அனுபவத்தை  பெறுவார்கள். 

 

Rock Star on Hotstar

 

இந்த நிகழ்ச்சி மிக உயர்ந்த தரத்தில், சிறந்த காட்சி மற்றும் ஒலி தெளிவுடன் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது. நாட்டின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத், மில்லியன் கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களை வென்றவர்.  சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது புதிய இசை நிகழ்ச்சி குறித்தான தகவலை பகிர்ந்தார், இது ரசிகர்களை உற்சாக எல்லைக்கு அழைத்து சென்றது. அனிருத்தின் மியூசிக் கான்செர்ட் நிகழ்ச்சி பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்நிகழ்ச்சி குறித்த கூடுதல் தகவல்கள் வரும் நாட்களில் அதிகாரப்பூர்வமாக  வெளியாகும். 

Related News

8447

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery