Latest News :

என்னை நம்பி பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் ‘அர்த்தம்’ - மாஸ்டர் மகேந்திரன் நெகிழ்ச்சி
Sunday August-21 2022

மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக நடிக்கும் படம் ‘அர்த்தம்’. இதில் ஷ்ரத்தா தாஸ் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் அஜய், ஆமணி, ச்சாஹிதி, பிரபாகர், ரோகினி, ரோபோ சங்கர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை மினெர்வா பிக்சர்ஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரிக்கிறார். மணிகாந்த் தல்லகுடி எழுதி இயக்கியிருக்கிறார்.

 

இப்படத்தின் தமிழ் பதிப்புக்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மாஸ்டர் மகேந்திரன், “நம்மை நம்பி ஹைதராபாத்திலிருந்து இங்கு வந்து தயாரித்திருக்கிறார் இந்த படத்தின் தயாரிப்பாளர்.  நல்ல கண்டெண்ட் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையில் உழைத்துள்ளோம். இவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்த நினைத்தேன். என்னை நம்பி பெரிய பட்ஜெட்டில் ஒரு படத்தை தயாரித்துள்ளார்.இயக்குநர் மணிகாந்துக்கும் எனக்கும் சண்டை வந்ததே இல்லை. எங்களுக்குள் நல்ல புரிந்துணர்வு இருந்தது. என்னை நம்பி தமிழுக்கு வந்ததாக சொன்னார், நான் எங்கள் டெக்னீஷியன்களை நம்பலாம் என்றேன். படத்தை அழகாக எடுத்துள்ளார். ரோபோ, வினோத் எனக்காக நடித்து கொடுத்தார்கள். நிறைய நடிகர்கள் நடித்துள்ளனர். ஷ்ரத்தா தாஸ் இந்தியாவில் மிகப்பெரிய பிரபல நடிகை. மிகச்சிறந்த நடிகை, கடின உழைப்பாளி தமிழில் பெரிய வெற்றி பெறுவார். நீங்கள் தரும் ஆதரவில் தான் என் திரைப்பயணம் இருக்கிறது. உங்கள் அன்புக்கு நன்றி.” என்றார்.

 

தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் பேசுகையில், “நான் முன்னதாக இரண்டு தெலுங்கு படங்களை தயாரித்துள்ளேன் இது எனது முதல் தமிழ் படம். கடந்த லாக்டவுன் சமயத்தில் தான் இந்தப்படத்தை துவக்கினோம். இரண்டு மொழிகளில் எடுக்க திட்டமிட்டு மகேந்திரனை நாயகனாக்கினோம், அவர் சென்னை படப்பிடிப்பிற்கு மிக உதவியாக இருந்தார். இந்தப்படத்தில் மிக சிறப்பாக நடித்துள்ளார். படம் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம் நன்றி.” என்றார்.

 

இயக்குநர் மணிகாந்த் தல்லகுடி பேசுகையில், “இந்தப்படம் எனது முதல் தமிழ் படம். இரண்டு மொழிகளிலும் எடுத்துள்ளோம். சென்னையில் தான்  70 சதவீதம் ஷீட் செய்தோம். ரோபோ சங்கர், வினோத் மிகப்பெரும் ஆதரவாக இருந்தார்கள். மகேந்திரன் மிகப்பெரிய ஒத்துழைப்பை தந்தார். மிகச்சிறப்பாக நடித்துள்ளார். ஷ்ரத்தா தாஸ் அழகான நடிப்பை தந்துள்ளார். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் பெரிய நன்றிகள்.” என்றார்.

 

நடிகை ஷ்ரத்தா தாஸ் பேசுகையில், “நான் 40 படங்களுக்கு மேல் தெலுங்கு,  மலையாளம்,  இந்தி, ஆங்கிலம் பெங்காலி படங்களில் நடித்துள்ளேன். நான் தமிழில் முதல் முறையாக நடிப்பது மிகவும் மகிழ்ச்சி. இப்படத்தில் சைக்காலஜிஸ்ட்டாக நடித்துள்ளேன். நான் சைக்காலஜி டிகிரி முடித்துள்ளேன்.  அதனால் நடிப்பு எளிதாக இருந்தது. கிளாமர் குறைவாக கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிப்பது மகிழ்ச்சி.  மகேந்திரன் போன்ற அனுபவமிக்க நடிகருடன் நடித்தது மகிழ்ச்சி. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

 

நடிகர் ரோபோ சங்கர் பேசுகையில், “இந்த திரைப்படத்தில் நான் கெஸ்ட் ரோல் பண்ணியிருக்கேன். தம்பி மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக நடித்துள்ளார். மாஸ்டர் படத்தில் அற்புதமான நடிப்பை தந்தார். இந்தபடத்திலும் நன்றாக நடித்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. நான் மிக விரைவில் இயக்குநராக பரிணாமம் எடுக்க போகிறேன். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.” என்றார்.

 

நடிகர் வினோத் பேசுகையில், “இந்தப்படம்  நண்பர் மூலம் ஷூட்டிங் பார்க்க போனேன் அங்கு அவர்கள் வேலை பார்த்தது பிடித்திருந்தது. மணி சாரிடம் நானே வாய்ப்பு கேட்டு இந்தப்படத்தில் நடித்தேன். ஒரு தெலுங்கு படத்தில் வேலை செய்தது மிக வித்தியாசமான அனுபவமாக இருந்தது. என்னை மிக நன்றாக பார்த்து கொண்டார்கள். ரோபோ சங்கர் அண்ணாவுடன் மீண்டும் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

ஹர்ஷவர்தன் ரமெஷ்வர் இசையமைக்கும் இப்படத்திற்கு பவன் சென்னா ஒளிப்பதிவு செய்கிறார். ஷேடோவ் படத்தொகுப்பு செய்ய சி.எஸ்.சாய்மணி கலையை நிர்மாணிக்கிறார். விவேக், முத்தமிழ், ராகெண்டு மவுலி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

Related News

8449

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery