Latest News :

திருச்சி கல்லூரியில் கலைக்கட்டிய ‘கோப்ரா’ ரசிகர்கள் சந்திப்பு விழா!
Tuesday August-23 2022

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கோப்ரா’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையடுத்து படத்தின் புரொமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வரும் விக்ரம் உள்ளிட்ட ‘கோப்ரா’ படக்குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில், திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில்  ‘கோப்ரா’ படக்குழு ரசிகர்களை சந்தித்து உரையாடினார்கள். 

 

மாணவர்கள் முன்னிலையில் பேசிய நடிகர் விக்ரம், “நான் திருச்சிக்கு சிறு வயதில் வந்திருக்கிறேன். நிறைய சுத்தியிருக்கிறேன் அப்போதே செண்ட்ஜோசப் கல்லூரி பிடிக்கும் இக்கல்லூரியில் நீங்கள் படிப்பது பெருமை. ’கோப்ரா’ படத்தைப் பொறுத்தவரை நிறைய புதுமைகள் இதில் இருக்கிறது.  உங்களுக்கு அந்நியன் பிடிக்குமெனில் அது இதில் இருக்கிறது அதைத்தாண்டி சயின்ஸ் ஃபிக்சன் இருக்கிறது. எமோஷன் காமெடி ஆக்சன் எல்லாம் கலந்து இருக்கும். அஜய் ஞானமுத்துவின் முதல் இரண்டு படங்களும் வித்தியாசமாக இருக்கும். அதே போல் இந்தப்படமும் மிக வித்தியாசமாக செய்துள்ளார். படம் மிக ஃப்ரெஷ்ஷான படமாக இருக்கும். இன்னும் ஒரு வாரத்தில் படம் வருகிறது. உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி.” என்றார்.

 

Vikram in Cobra

 

நடிகை ஶ்ரீநிதி ஷெட்டி பேசுகையில், “தமிழில் எனக்கு முதல் படம், படத்திற்காக நானும் மிக ஆவலுடன் காத்திருக்கிறேன். மிக சிறப்பான படைப்பாக வந்துள்ளது. உஙகள் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.

 

நடிகை மீனாட்சி பேசுகையில், “விக்ரம் சார் பொறுத்தவரை ஒவ்வொரு படத்திலும் அவரது முழு உழைப்பை தருவார். நாமெல்லாம் சில வருடம் ஒரே விசயத்தை செய்தால் சலிப்பாகிவிடுவோம் ஆனால் அவர் 61 வது படத்திலும் முதல் படம் போல் உழைக்கிறார் அது அவரிடத்தில் மிகவும் பிடிக்கும்.” என்றார்.

 

நடிகை மிருணாளினி பேசுகையில், “முதலில் விக்ரம் சாருடன் நடிப்பதை என்னால் நம்பமுடியவில்லை. அவரது படங்களை தியேட்டரில் ரசிகையாக பார்த்து ரசித்திருக்கிறேன். அவருடனே நடிப்பேன் என நினைத்துப் பார்க்கவில்லை. மிக அற்புதமான அனுபவமாக இருந்தது. இப்படம் உங்களுக்கு புதிய அனுபவத்தை தரும்.” என்றார்.

 

நிகழ்வின் முடிவில் கல்லூரி மாணவர்கள் இணைந்து விக்ரம் அவர்களின் உருவப்படம் வரைந்த ஓவியத்தை பரிசாக அளித்தார்கள்.

 

Cobra

 

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதில், இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

 

ஆகஸ்ட் 31 ஆம் தேதி  உலகமெங்கும் திரையரங்குகளில்  வெளியாகும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது.

Related News

8454

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery