Latest News :

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
Wednesday August-24 2022

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஸ்டுடியோ கிரீன் கே.இ.ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸ் வம்சி - பிரமோத் இணைந்து தயாரிக்கும் இப்படம் சூர்யாவின் 42 வது படமாக உருவாகிறது.

 

இந்த நிலையில், சிவா - சூர்யா கூட்டணி படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்திற்கு தற்காலிக தலைப்பாக ’சூர்யா 42’ என்று வைக்கப்பட்டுள்ளது.

 

’சூரரைப் போற்று’, ’ஜெய் பீம்’, ‘எதற்கும் துணிந்தவன்’ என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’, பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில், தற்போது சிறுத்தை சிவா இயக்கும் படத்திலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

 

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக திகழும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 25 வது தயாரிப்பாக உருவாகும் இப்படத்தை பல பான் இந்தியா திரைப்படங்களை தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் வம்சி - பிரமோத் இணைந்து தயாரிப்பதால் படத்திற்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

Surya 42

 

பாக்ஸ் ஆபிஸ் கமர்ஷியல் சினிமாவின் இயக்குநர் என்ற புகழை  ஒவ்வொரு திரைப்படத்திலும் அதிகரித்துக் கொண்டே செல்லும் திரைப்பட இயக்குநர் சிவா, உலகளாவிய பார்வையாளர்களுக்கு மற்றொரு மெகா விருந்தை தரவுள்ளார். இப்படம்  அவரது முந்தைய படங்களில் இருந்து வேறுபட்டு  ஒரு மாறுபட்ட படைப்பாக இருக்கும்.

 

இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட்டின் பிரபல நடிகை திஷா பதானி நடிக்கிறார். யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இன்னும் சில முன்னணி நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

 

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்கிறார். மிலன் கலையை நிர்மாணிக்க, சுப்ரீம் சுந்தர் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார். ஆதி சங்கர் திரைக்கதை எழுத, மதன் கார்கி வசனம் எழுதுகிறார். 

Related News

8460

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery