சினிமாவில் கோடி கோடியாக சம்பாதிக்கும் நடிகர், நடிகைகள் பல தொழில்களில் சத்தமில்லாமல் முதலீடு செய்வது ஒரு பக்கம் இருக்க, விலையுர்ந்த வீடுகள் வாங்குவதும் அதிகரித்துள்ளது. அந்த வகையில், திரையுலக வியக்கும் அளவுக்கு நடிகர் விஜய் ஒரு வீடு வாங்கியிருக்கிறாராம்.
தற்போது நீலாங்கரையில் பங்களா வீட்டில் குடும்பத்துடன் வசிக்கும் விஜய், அட்டையாறில் அலுவலகம் வைத்திருக்கிறார். இந்த நிலையில், புதிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு ஒன்றை விஜய் வாங்கியிருக்கிறார். அந்த ஒரு வீட்டின் விலை மட்டுமே ரூ.34 கோடியாம். அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட அந்த ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு பிளாட்டை அலுவலகமாக விஜய் பயன்படுத்தி வருகிறாராம்.
அந்த அலுவலகத்திற்கு சென்று வந்தவர்கள், அதன் பிரம்மாண்டத்தில் உரைந்து விடுகிறார்களாம். அந்த அளவுக்கு ஆடம்பரமாக இருக்கும் அந்த பிளாட் குறித்து ஒட்டு மொத்த கோலிவுட்டே பரபரப்பாக பேசிக்கொண்டிருக்க, இந்த தகவல் நடிகை நயன்தாரா காதுக்கு போக, அவரும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு வாங்க முடிவு செய்துவிட்டாராம்.
தற்போது அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நயன்தாரா, விஜய் வாங்கியது போல் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பிளாட்டை விரைவில் வாங்க இருப்பதாகவும், தற்போது அதற்கான முயற்சியில் அவர் இறங்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது...
அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...
தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...