Latest News :

நம்ம ஊர்ல இப்படி ஒரு படத்தை செய்ததே ஆச்சரியம் தான் - ‘கேப்டன்’ படத்தை பாராட்டும் பிரபலங்கள்
Friday August-26 2022

’டெடி’ படத்தை தொடர்ந்து நடிகர் ஆர்யா - இயக்குநர் சக்தி செளந்தர் ராஜா கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் ‘கேப்டன்’. சயின்ஸ் பிக்‌ஷன் திரில்லர் ஜானர் திரைப்படமான இப்படம் ஏலியனை மையமாக வைத்து உருவாகியுள்ளது. 

 

திங் ஸ்டுடியோஸ் மற்றும் தி ஷோ பீப்பிள் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

 

இதற்கிடையே படத்தின் வெளியீட்டை தொடர்ந்து நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் ஆர்.பி.செளத்ரி, கலைப்புலி தாணு, நடிகர் சந்தானம், இயக்குநர்கள் ஏ.எல்.விஜய், விஷ்ணு வர்தன், ஆர்.கண்ணன், முத்தையா, ஆனந்த் சங்கர் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யா பேசுகையில், “நாங்கள் இந்த கதையை தயாரிப்பாளர் ஸ்வரூப்பிடம் கூறும் போது, அவர் எங்களை முழுதாய் நம்பினார். படத்திற்கு தேவையான அனைத்தையும் கொடுத்தார். இயக்குனர் சக்தி உடைய சிறப்பு என்னவென்றால் அவர் ஒவ்வொரு படத்திலும் ஒரு புது ஜானரை முயற்சிக்கிறார். கிராபிக்ஸ் காட்சிகளை எல்லாம் அவர் சிறப்பாக திரையில் கொண்டு வருவார். இந்த படத்தின் சண்டைகாட்சிகளை சிரத்தை எடுத்து செய்துள்ளோம். ஒரு பிரமாமண்ட மிருகத்துடன் சண்டை போடும் வகையில் இருக்கவேண்டுமென, அதற்கு ஏற்றார் போல் சண்டைக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இமான் சார் இந்த படத்தின் முதுகெலும்பு என்று தான் சொல்ல வேண்டும்.  இது ஒரு ஆக்சன் படம் என்றாலும், அதில் ஒரு அழகான காதல் கதை இருக்கிறது. இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை.  நன்றி.” என்றார்.

 

இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் பேசுகையில், “கேப்டன் படம், நான் செய்த படங்களிலேயே மிகவும்  வித்தியாசமான படம். படம் உருவாக ஆர்யாவும், தயாரிப்பாளர் ஸ்வரூப்பும் தான் காரணம். இதுபோன்ற படங்களை நம் ஊரில் செய்ய முடியுமா என்று தெரியவில்லை. இந்த படம் உருவாவதற்கு தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி கூற வேண்டும். இந்த படம் என் மனதிற்கு நெருக்கமான படம்.  உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும்.” என்றார்.

 

நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி பேசுகையில், “இந்த படம் ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. நிறைய இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். இந்த படத்தில் ஒரு ஆழமான காதல் கதை இருக்கிறது. இயக்குனர் சக்தி  உடைய கடின உழைப்பை படத்தை சிறப்பாக மாற்றி இருக்கிறது. நடிகர் ஆர்யா மிகுந்த உறுதுணையாக இருந்தார். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது.” என்றார்.

 

இசையமைப்பாளர் டி இமான் பேசுகையில், “இந்த படத்தில் ஆர்யா கடின உழைப்பை கொடுத்துள்ளார், அது திரையில் தெரிகிறது. அதிகமாக கிராபிக்ஸ் இருக்க கூடிய கதைக்களத்தை தான் இயக்குனர் சக்தி கொண்டு வருவார். அது மிகவும் கடினமான ஒரு காரியம். ஏனென்றால் கற்பனையான உருவத்தை இல்லாமலே இயக்க வேண்டும். அதற்கு இசையமைக்க வேண்டும். அது மிகவும் சவாலான காரியம்.  இயக்குனர் உடைய தெளிவான சிந்தனை தான் திரைப்படத்தை நேர்த்தியாக்கி இருக்கிறது. இந்த படத்தில் யுவன் ஒரு பாடல் பாடியுள்ளார். அவருக்கு  நன்றி. அனைவருக்கும் என் நன்றிகள்.” என்றார்.

 

Captaian

 

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசுகையில், “திங் ஸ்டுடியோஸ்  நிறுவன முதல் படைப்பே கேப்டன் என்ற பெயரில் வந்திருப்பது மகிழ்ச்சி. படத்தை நேர்த்தியாக உருவாக்குவதில் சிறந்த இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன், அவருடைய எண்ணத்தை இமான் இசையாக்கி இருக்கிறார். நடிகர் ஆர்யா சிறப்பான நடிகர். அவர் திரைப்படத்தை வெளியிடுவதிலும் ஒரு பகுதியாக இருக்கிறார். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.

 

தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி பேசுகையில், “கேப்டன் படத்தின் இசையும் டிரெய்லரும் பான் இந்தியா திரைப்படத்திற்கான அம்சங்கள் அனைத்து நிறைந்து இருப்பதை நிரூபிக்கிறது. இந்த படத்தின் டைட்டிலுக்கு பொருத்தமானவர் ஆர்யா. ஒரு வெற்றி கூட்டணி மீண்டும் படம் பண்ணியுள்ளனர். படம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.” என்றார்.

 

நடிகர் சந்தானம் பேசுகையில், “என்னுடைய நட்பு ஆர்யாவுடன் மிகவும் நெருக்கமான ஒன்று. ஆர்யா உடைய எந்த திரைப்படமாக இருந்தாலும், அதற்கு என் அன்பு இருக்கும். இது ஒரு ஏலியன் படம், இந்த புதுவிதமான கற்பனைக்கே எனது வாழ்த்துகள். இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும்.” என்றார்.

 

இப்படத்தில் ஆர்யாவுடன்  சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரிஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

Related News

8466

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery